அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
தற்போது தமிழில் ரஜினி ஜோடியாக ‘லிங்கா’ படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. தெலுங்கில் ‘ருத்ரமாதேவி’, ‘பாகுபலி’ என இருபடங்கள் கைவசம் உள்ளன. இதில் ருத்ரமாதேவி படப்பிடிப்பு முடிந்து விட்டது. பாகுபலி படத்தில் பிசியாக நடிக்கிறார்.
இந்த நிலையில் அனுஷ்காவுக்கு 32 வயது ஆவதால் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் தீவிரம் காட்டினர். மாப்பிள்ளை தேடவும் தொடங்கினார்கள்.
தற்போது மாப்பிள்ளை முடிவாகி விட்டதாக கூறப்படுகிறது. யார் என்பதை அறிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளார்களாம். மாப்பிள்ளை சினிமாவை சேர்ந்தவர் இல்லை என்றும் ஆந்திராவில் பிரபல தொழில் அதிபராக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
தெலுங்கு இயக்குனர் ஒருவர் சமீபத்தில் அனுஷ்காவை அணுகி கதை சொல்லி நடிக்க அழைத்தார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் அந்த கதையும், கேரக்டரும் அனுஷ்காவுக்கு ரொம்ப பிடித்து போனதாம். ஆனால் திருமணத்துக்கு தயார் ஆவதால் அந்த படத்தில் நடிக்க இயலாது என மறுத்து விட்டார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டார் என தெரிகிறது.
Home » Posts filed under செய்தி
Showing posts with label செய்தி. Show all posts

என் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையா.?! இன்ப அதிர்ச்சியில் பாபி சிம்ஹா!!
ஜிகர்தண்டா வில்லன் பாபி சிம்ஹாவை, ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் இன்னொரு ஹீரோ போன்ற கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார் பத்ரி. ஆக, தன் மீது விழுந்திருந்த வில்லன் என்கிற நெகடீவ் இமேஜை இந்த படத்தில் மாற்றி விடும் வகையில் நடித்துள்ளார் சிம்ஹா. ஆனால், அடுத்தபடியாக ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று அவர் திட்டம் எதுவும போடவில்லை.
அதற்குள்ளாக, தம்பி என் அடுத்த படத்தோட ஹீரோ நீதான் என்று அவர் பாக்கெட்டில் அட்வான்சை திணித்து விட்டார் மரியான் டைரக்டர் பரத்பாலா. தனுஷ் நடித்த அந்த மரியான் படம் ப்ளாப்தான் என்றாலும், தேசிய விருது பெற்ற நடிகரை இயக்கியவராச்சே. அதனால் அவர் சொன்ன கதையை கேட்டும் கேட்காமலும் நடிப்பதற்கு டிரிபிள் ஓ.கே சொல்லி விட்டு காலரை தூக்கி விட்டுக்கொண்டு திரிகிறார் சிம்ஹா.
இந்த நிலையில், சமீபத்தில் பரத்பாலாவை சிம்ஹா சந்தித்தபோது, படத்தைப்பற்றிய சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்களாம். அப்போது பேச்சுவாக்கில் படத்துக்கு யார் சார் மியூசிக் என்று சிம்ஹா கேட்டதற்கு, ஏ.ஆர்.ரகுமான்தான். வந்தே மாதரம் வீடியோ ஆல்பத்திற்கு இசையமைத்தபோதே ஏற்பட்ட நட்புதான் மரியானுக்கும் ரகுமானை இசையமைக்க வைத்தது. அது இந்த படத்திலும் தொடர்கிறது என்றாராம்.
அவர் சொன்ன இந்த சேதி பாபி சிம்ஹாவை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, அப்படின்னா நான் ஹீரோவாக நடிக்கும் முதல் படமே மெகா படமாகப்போவுது என்று தனது கோலிவுட் நண்பர்களிடம் புதிய எனர்ஜியுடன் கூறி வருகிறார் பாபி.

தயாரிப்பாளராகப் போகிறாரா சமந்தா….?
தமிழில் தற்போதுதான் முன்னணி இடத்தைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறார் சமந்தா. அவர் நடித்து சில வாரங்களுக்கு முன் வெளிவந்த ‘அஞ்சான்’ படம் அவருக்குப் பெரிதாகக் கைகொடுக்கவில்லை என்றாலும், அவரைப் பற்றி பேச வைத்துவிட்டது. இருந்தாலும் விஜய் ஜோடியாக நடித்து வரும் ‘கத்தி’ படத்தைத்தான் தற்போது பெரிதும் எதிர்பார்த்து வருகிறார். விக்ரம் ஜோடியாகவும் ‘பத்து எண்ணுறதுக்குள்ளே’ படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.
இதனிடையே தமிழில் அவர் ஒரு படத்தை தயாரிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு இயக்குனர் சமந்தாவைச் சந்தித்துக் கதை சொல்லியிருக்கிறார். அந்தக் கதை சமந்தாவுக்கு மிகவும் பிடித்துப் போக அவரே இந்தப் படத்தைத் தயாரிக்கிறேன் என்றும் சொன்னாராம். மிகவும் குறைந்த செலவில் எடுக்கப்பட உள்ள இந்தப் படத்தில் சமந்தா நடிக்கப் போவதில்லை.
படத்திற்கு எவ்வளவு பட்ஜெட் ஆகும் , எத்தனை நாட்களில் படப்பிடிப்பு முடியும் போன்ற விவரங்களை சமந்தா கேட்டிருப்பதாகவும், அந்தத் திட்டமிடல் முடிந்த பின் அது பற்றி சமந்தா முடிவெடுப்பார் என்றும் தெரிகிறது.
இன்றைய தலைமுறையில் விஷால், சூர்யா போன்ற ஹீரோக்கள்தான் தற்போது தயாரிப்பாளர்களாக மாறி வருகிறார்கள். அவர்களோடு படம் தயாரிக்கும் இன்றைய தலைமுறை ஹீரோயினாக சமந்தாவும் சேருவாரா என்பது இன்னும் கொஞ்ச நாட்களில் தெரிந்துவிடும்.

அகத்தியன் படத்திலிருந்து ஓட்டம் பிடித்த ஓவியா!
கேரளா திருச்சூரைச்சேர்ந்த ஹெலன்தான் நடிகை ஓவியா. களவாணி படத்துக்காக மலையாள படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த அவரை தமிழுக்கு கொண்டு வந்து கதாநாயகி ஆக்கினார் டைரக்டர் சற்குணம்.. ஆனால் களவாணி படம் மெகா ஹிட்டானபோதும் அதன்பிறகு சரியான படங்களை தேர்வு செய்யத் தெரியாமல் சில படங்களில் கமிட்டானார் ஓவியா.
அந்த படங்கள் திரைக்கு வராமல் போனதோடு ஓவியாவின் மார்க்கெட்டை கவிழ்த்து விட்டன.
இருப்பினும் தொடர்ந்து போராடிய ஓவியா, சுந்தர்.சியின. கலகலப்பு படத்தில் அயிட்டம் நடிகை போன்று அஞ்சலியுடன் இணைந்து கவர்ச்சிக்கோதாவில் குதித்தார். அதிலிருந்து அவ்வப்போது ஒரு படத்தில் நடித்தபடி தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டு வருகிறார். தற்போது சீனி, சண்டமாருதம் ஆகிய படங்களில நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பாரதிராஜா தயாரிப்பில், அகத்தியன் இயக்கி வரும் படத்திலும் ஒரு வேடத்தில் நடிக்க கமிட்டானார் ஓவியா. ஆனால், அந்த படத்தின் நாயகியாக டைரக்டர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமியே பின்னர் ஒப்பந்தம் ஆனதால் அதிர்ச்சியாகி விட்டாராம் ஓவியா. மற்ற நடிகைகள் ஹீரோயின் என்றாலும தனக்கு ஓரளவு நடிக்க சான்ஸ் தருவார்கள்.
ஆனால் இப்போது டைரக்டரின் மகளே கதாநாயகி என்கிறபோது நமக்கு நடிக்க காட்சிகளே இருக்காது. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டை போன்று தன்னை ஓரங்கட்டி விடுவார்கள் எனறு உஷாராகி விட்ட ஓவியா, இரண்டு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர் பின்னர் அப்படத்திலிருந்தே விலகி விட்டாராம். அதனால் ஓவியா கேரக்டருக்கு வேறு நடிகை தேடி வருகிறார்கள்.

சலீம் பட டைரக்டரை ஐதராபாத்துக்கு அழைத்த நடிகர் வெங்கடேஷ்!
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் சலீம். இந்த படத்தை புதுமுக இயக்குனர் நிர்மல் குமார் இயக்கியிருந்தார். டில்லி மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை தழுவி, அரசியல் முலாம் தடவி எடுக்கப்ட்ட இந்த படம் ஓரளவு வெற்றி பெற்றதால், இப்போது நிர்மல்குமாருக்கு சான்ஸ் கொடுக்க சிலர் முன்வந்துள்ளனர்.முக்கியமாக, அந்த படத்தை பார்த்து சூர்யா உள்ளிட்ட சில ஹீரோக்கள் அவருக்கு வாழ்த்து சொல்லி எனர்ஜி கொடுத்திருக்கிறார்கள். அதையடுத்து, முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை தயாரித்த எல்ரட் குமார், தனது நிறுவனத்துக்கு ஒரு படம் இயக்கித்தருமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம். தவிர மேலும் சில நிறுவனங்களும் பேச்சுவார்த்தையில் உள்ளார்களாம்.
இதற்கெல்லாம் மேலாக, சலீம் படத்தைப்பார்த்த தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், நிர்மல்குமாரை ஐதராபாத்துக்கு அழைத்து சலீம் படத்தை தெலுங்கில் என்னை வைத்து ரீமேக் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளாராம்.
இதனால் சந்தோசத்தில் திக்குமுக்காடிப்போயிருக்கிறார் நிர்மலகுமார். மேலும், மலையாள த்ரிஷ்யம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை ஸ்ரீப்ரியாவின் இயக்கத்தில் வெங்கடேஷ் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தியின் ”மெட்ராஸ்” படத்திற்கு தடை கோரி வழக்கு!
தொடர் தோல்விகளுக்கு பிறகு, கார்த்தி மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ”மெட்ராஸ்”. ‘அட்டகத்தி’ ரஞ்சித் இயக்கத்தில், கார்த்தி-கத்ரீனா தெரஸா நடித்துள்ள மெட்ராஸ் படம், வடசென்னையை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ளது.
தற்போது இந்தப்படம் இப்போது ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது. இந்நிலையில், ”மெட்ராஸ்” படத்திற்கு தடைகோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாலசுப்ரமணியம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நான், ”கருப்பர்கள் நகரம்” என்ற படத்தை எடுத்து வருகிறேன். இப்படம் பாதி முடிவடைந்துள்ளது. இதனிடையே கார்த்தி நடித்துள்ள மெட்ராஸ் படத்தின் கதை எனது கதையை போன்று உள்ளது. எனது கதையை திருடி மெட்ராஸ் படத்தை எடுத்துள்ளனர்.
எனவே இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன், அக்டோபர் 22ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு நோட்டீஸ்அனுப்பி, வழக்கை ஒத்தி வைத்தார்.
இந்தப்படத்தின் மூலமாவது ஒரு வெற்றியை தக்க வைத்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்த கார்த்திக்கு, படம் ரிலீஸாகும் முன்பே ஏற்பட்டு இருக்கும் சிக்கல் கவலையை அளித்துள்ளது.
அஜீத்துடன் நடிக்க அப்ளிகேசன் போட்டு வைத்துள்ள ஹன்சிகா!
நடிகைகளைப் பொறுத்தவரை காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும். அதாவது சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டிருக்கும்போதே சம்பாதித்துக்கொள்ள வேண்டும், அதேபோல், தங்களது பேவரிட் ஹீரோக்களுடனும் டூயட் பாடிக்கொள்ள வேண்டும். அதை தவற விட்டால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதைதான்.
இது குழந்தை நட்சத்திரமாக நடித்ததில் இருந்தே சினிமாவையும் படித்து வரும் ஹன்சிகாவுக்கு தெரியாமல் இருக்குமா என்ன? தமிழில் மாப்பிள்ளை படத்தில் தனுசுடன் நடித்தபடி கோடம்பாக்கத்துக்குள் வந்த அவர், பின்னர், விஜய், சூர்யா, ஜெயம்ரவி, சித்தார்த், ஆர்யா, சிம்பு, கார்த்திக், உதயநிதி என பல ஹீரோக்களுடன் நடித்து விட்டார். அதனால் இதே வேகத்தில் அஜீத்துடனும் நடித்து விட வேண்டும் என்று முழு ஆர்வத்தில் இருக்கிறார் ஹன்சிகா.
அதனால், அஜீத்தின் அடுத்தடுத்த படங்களை இயக்கும் டைரக்டர்களை கண்டறிந்து அவர்களிடம், அஜீத்துடன் என்னை ஜோடி சேருங்கள் என்று இப்போதே அப்ளிகேசன் போட்டு வைத்து வருகிறார் ஹன்சிகா.

தனுசை வைத்து 100 படங்களை இயக்குவாராம் கே.வி.ஆனந்த்!
கனா கண்டேன், அயன், கோ, மாற்றான் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த், தற்போது தனுசை நாயகனாக வைத்து இயக்கியுள்ள படம் அனேகன். மரியான் படத்திற்கு பிறகு இந்த படத்தில்தான் தனுஷ் முழுசாக நடிக்கயிருந்தார். ஆனால் இடையினில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய வேலையில்லா பட்டதாரி படத்தை முடிக்க வேண்டியிருந்ததால் அனேகன் தாமதமானது.
அதையடுத்து இந்தியில் தனுஷ் நடிக்கும் ஷமிதாப் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் சூதாடி ஆகிய பட வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி பல படங்களில் தனுஷின் கவனம் சிதறியிருந்ததால் அனேகன் திட்டமிட்டதை விட பல மாதங்கள் அதிகமாகி விட்டது. இருப்பினும் இப்போது மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டு பூசணிக்காய் உடைத்து விட்டனர்.
பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பு முடிகிற கடைசி நேரத்தில் இயக்குனர், ஹீரோவுக்கிடையே ஏதாவது ஒரு காரணத்துக்காக மோதல் வெடிக்கும். அதனால் இருவரும் ஆளுக்கொரு பக்கமாக முகத்தை திருப்பிக்கொண்டு செல்வார்கள்.ஆனால். இந்த அனேகன் படத்தைப் பொறுத்தவரை அப்படியெல்லாம் எதுவும் இல்லை. கே.வி.ஆனந்தும், தனுசும், இவ்வளவு சீக்கிரம் படப்பிடிப்பு முடிந்து விட்டதே என்று பீல் பண்ணும் அளவுக்கு தங்களது டுவிட்டரில் பாசமழை பொழிந்துள்ளனர்.
அதாவது தனுஷ் தனது டுவிட்டரில் கூறுகையில், எத்தனையோ டைரக்டர்களுடன் வேலை செய்துள்ள எனக்கு கே.வி.ஆனந்துடன் வேலை செய்தது மறக்க முடியாத அனுபவம். அவருடன் மீண்டும் மீண்டும் வேலை செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் கே.வி.ஆனந்த் தனது டுவிட்டரில், தனுஷ் ஒரு சிறந்த நடிகர். என்னிடம் மட்டும் அவருக்கேற்ற கதைகள் தொடர்ந்து அமைந்தால் அவரை வைத்து 100 படங்கள் வரை இயக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.

புதிய படங்களுக்கு கதை கேட்பதை நிறுத்திய அனுஷ்கா!
தென்னிந்திய சினிமாவில் விஜயசாந்திக்கு பிறகு ஒரு அதிரடி நடிகையாக உருவெடுத்தவர்தான் அனுஷ்கா. அருந்ததி படத்தில் அவர் நடித்த அதிரடி வேடம் அவரது இன்னொரு முகத்தை வெளிப்படுத்தியது.
ஆனபோதும் அதன்பிறகு சிலகாலம் திறமைக்கு தீனி போட சரியான படங்கள் இல்லாமல் வழக்கான கதாநாயகிகளைப்போன்று மரத்தை சுற்றியே டூயட் பாடிக்கொண்டிருந்த அனுஷ்காவுக்கு, ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி என்ற இரண்டு பெருந்தீனி படங்கள் கிடைத்தன.
அதனால், அந்த சரித்திர கால படங்களுக்காக சில பண்டைகால போர்ப்பயிற்சிகளை பயிற்சி எடுத்து நடித்துள்ளார். அதோடு, தமிழில் அவர் இதுவரை ஜோடி சேராமல் இருந்த ரஜினி, அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பும் இப்போதுதான் அனுஷ்காவுக்கு கிடைத்திருக்கிறது. ஆக, தற்போது அவரது கைவசம் 4 மெகா படங்கள் உள்ளன. நான்கு படங்களுமே இறுதிகட்டத்தில் இருப்பதால், ஒன்றன்பின் ஒன்றாக திரைக்கு வரவும் தயாராகிக்கொண்டிருக்கின்றன.
அதனால் இந்த படங்கள் ரிலீசாகும் நேரத்தில் தமிழ், தெலுங்கில் அனுஷ்காவின் மார்க்கெட் இன்னும் எகிறி விடும் என்பதால், அவரிடம் இப்போதே கதையை சொல்லி கால்சீட் வாங்கி விட வேண்டும் என்று சில இயக்குனர்கள், அனுஷ்காவை முற்றுகையிட்டனர். ஆனால், தன்னை மையப்படுத்திய கதைகளாக இருந்தபோதும், அவற்றை கேட்கும் நிலையில் அனுஷ்கா இல்லையாம்.
தற்போது, நடித்து வரும் படங்கள் முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன். அதன்பிறகு நான் நடிப்பேனா மாட்டேனா என்பதை இப்போது எதுவும் சொல்ல முடியாது என்று கூலாக சொல்லி டைரக்டர்களை திருப்பி அனுப்பி வருகிறாராம் அனுஷ்கா.

கத்தி பாடலுக்கு பாராட்டு தெரிவித்த சிம்பு!
ஆரம்பத்தில் தன்னை ரஜினி ரசிகராகக் காட்டிக்கொண்ட சிம்பு, கடந்த சில வருடங்களாக தன்னை ஒரு அஜித் ரசிகர் என்று சொல்லி வருகிறார். அதை எந்த இடத்திலும் மறைக்காமல் வெளிப்படுத்தி வரும் சிம்பு, அவ்வப்போது தனக்கு விஜய்யும் நண்பர்தான் என்றும் சொல்வார்.
கத்தி பாடல்கள் குறித்து, கத்தி பாடல்கள் சூப்பராக வந்திருப்பதாகவும், அனிருத் பின்னியிருக்கிறார் என்றும், கத்தி டீமுக்கு என் வாழ்த்துக்கள் என்றும் ட்வீட் பண்ணி இருக்கிறார் சிம்பு.
நாளை, அதாவது செப்டம்பர் 18 அன்று கத்தி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவிருக்கிறது.
அனிருத்தும் சிம்புவும் நண்பர்கள் என்ற வகையில் கத்தி படத்தின் பாடல்கள் வெளியாவதற்கு முன்பே சிம்புவிற்கு போட்டுக் காட்டியுள்ளார் அனிருத். பாடல்களைக் கேட்டுவிட்டு அனிரத்தை வெகுவாகப் பாராட்டிய சிம்பு, தன்னுடைய பாராட்டு வெளி உலகத்துக்கும் தெரியட்டுமே என்ற நல்லெண்ணத்தில் அதை ட்வீட் பண்ணி இருக்கிறார்.
மற்றொரு ட்வீட்டில் அனிருத்… உன்ன நினைச்சா சந்தோஷமா இருக்குடா… எல்லா பாட்டும் சூப்பரா இருக்கு… குறிப்பா செஃல்பி புள்ள… சூப்பர்!. வாழ்த்துகள்! என்றும் வாசித்திருக்கிறார். அனிருத்தை மட்டுமல்ல, கத்தி படத்தின் நாயகனான விஜய்யை குறிப்பிட்டு, தலைவா விஜய்… தல ஃபேன்தான்… ஆனா தலைக்கனம் இல்லாத ஃபேன்! என்றும் ட்வீட் பண்ணி இருக்கிறார்.

மகேஷ் பாபு, அமீர்கானுக்கு சூர்யா சவால்
உலகம் முழுவதும் ஐஸ் பக்கெட் குளியல் சவால் புகழ்பெற்றது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழுந்தது.
இந்த நிலையில் மலையாள நடிகர் பகத் பாசில் மரக்கன்றுகளை நடுங்கள் என்று பிளாண்ட் ஏ ட்ரீ என்ற சவாலை துவக்கி வைத்து மம்முட்டிக்கு சவால் விட்டார்.
மம்முட்டி அவரது சவாலை ஏற்று தனது விவசாய நிலத்தில் மரங்களை நட்டுவிட்டு அவர் சூர்யாவுக்கு சவால் விட்டார்.
தற்போது சூர்யா தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டுவிட்டு தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கும், இந்தி நடிகர் அமீர்கானுக்கும் சவால் விட்டுள்ளார்.

ராஜபக்ஷேவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை - சென்னையில் கத்தி தயாரிப்பாளர் பேட்டி!
கத்தி படம் தொடர்பாக தமிழ் அமைப்புகளுடன் பேச தயார், எனக்கும் ராஜபக்ஷேவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என லைகா படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ் கரண் அல்லிராஜ், சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். துப்பாக்கி படத்திற்கு பிறகு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ''கத்தி''. விஜய் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். லண்டனை சேர்ந்த லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
விஜய்யின் சமீபத்திய படங்ளை போன்று ''கத்தி'' படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தமுறை கிளம்பியிருக்கும் எதிர்ப்பு சற்று சிக்கலானது. அதாவது படத்தை தயாரித்திருக்கும் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரண் அல்லிராஜ், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் நெருங்கிய உறவினர் என்று கூறி தமிழகத்தில், மாணவர்கள் அமைப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று அவர்கள் போர்க்கொடி பிடித்துள்ளனர்.
இந்நிலையில் கத்தி படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரண் அல்லிராஜ், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், ஐரோப்பா வாழ் தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு என்னைப்பற்றி தெரியும். இலங்கை தமிழர்களுக்கு நான் நிறைய உதவி செய்துள்ளேன். எனது தாயார் ஞானம் பெயரில் அறக்கட்டளை தொடங்கி, இலங்கை தமிழர்களின் நலனுக்காக பல்வேறு உதவிகளை செய்துள்ளேன். ஆரம்பத்தில் லைகா நிறுவனம் ஞானம் புரொடக்ஷ்ன்ஸ் பெயரில் இருந்தது. காலப்போக்கில் லைகா பெயரில் நிறைய தொழில்கள் தொடங்கியதால் அதையே தயாரிப்பு நிறுவனத்திற்கும் பெயர் வைத்தால் எல்லோரிடமும் ஈஸியாக ரீச் ஆகலாம் என்று எண்ணி லைகா என பெயர் மாற்றினேன்.
ராஜபக்ஷேவுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழக மக்களுக்கு ராஜபக்ஷே எப்படியோ, அப்படி தான் எனக்கும் அவர். ராஜபக்ஷே இந்த படத்தை தயாரிக்க பண உதவி செய்ததாக கூறுகிறார்கள், என்னுடைய இரண்டு நாள் வருமானம் இந்த கத்தி படத்தின் மொத்த தயாரிப்பு, அப்படி இருக்கையில், அவர் ஏன் எனக்கு பண உதவி செய்யப்போகிறார். எனது போட்டியாளர்கள் தான் தேவையில்லாமல் பிரச்னையை கிளப்பி கத்தி படத்தை எதிர்க்கின்றனர்.
தற்போது கத்தி படத்தை எதிர்ப்பவர்கள் சுயவிளம்பரத்திற்காக படத்தை எதிர்க்கின்றனர். இதுதொடர்பாக நானும் யாரிடமும் பேச தயாராக இருக்கிறேன். தமிழக மக்களுக்கு நான் எப்போதும் துரோகம் செய்ய மாட்டேன். நான் ஒரு தமிழன், அதனால் தமிழ் படங்கள் எடுக்க எண்ணினேன், தொடர்ந்து நிறைய தமிழ் மற்றும் இந்தி படங்களை எடுப்பேன். கத்தி படத்தின் இசை வெளியீடு செப். 18ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கு உங்களது ஆதரவு தேவை. கத்தி படம் தீபாவளிக்கு உறுதியாக ரிலீஸாகும்.
இவ்வாறு பேசினார் அல்லிராஜ்.

பாலிவுட்டில் கால் பதிக்கும் விஷால்!
விஷாலின் திரைப்பயணத்தை பாண்டியநாடுக்கு முன்பு , பாண்டியநாடுக்கு பின்பு என இரண்டாக பிரித்துக்கொள்ளலாம். காரணம், அவர் பாண்டியநாடு படத்தில் இருந்துதான் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார்.விஷால் பிலிம் பேக்டரி என்ற பட நிறுவனத்தை தொடங்கி தான் நடிக்கும் படங்களை தயாரித்து வருபவர், தற்போது தனது நண்பன் விஷ்ணு நடித்துள்ள ஜீவா படத்தையும் வாங்கி வெளியிடுகிறார். அதோடு, இன்னொரு நண்பரான விக்ராந்தை வைத்து ஒரு படமும் தயாரிக்கிறார்.
இந்த நிலையில், தனக்கு நண்பராக இல்லாதபோதும், சதுரங்க வேட்டை படத்தில் நாயகனாக நடித்த நடராஜை வைத்தும் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறார் விஷால். அதற்கு முன்னோட்டமாக, விஷ்ணு நடித்துள்ள ஜீவா படத்தில் அவரை ஒரு பாடலுக்கு நடனமாட வைத்திருக்கிறார்.
மேலும், நடராஜை வைத்து விஷால் படம் தயாரிப்பதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உள்ளதாம். அதாவது நடராஜ் தமிழை விட இந்தியில்தான் அதிக படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். அதனால் அங்கு அவருக்கு ஓரளவு பெயர் உள்ளதாம்.
அதனால் அவரை வைத்து ஒரு படம் தயாரித்தால் அநத் படத்தை பாலிவுட்டிலும் வெளியிட்டு, தனது விஷால் பிலிம் பேக்டரியை பாலிவுட்டுக்கும் அறிமுகம் செய்து விடலாம் என்பதே விஷாலின் முக்கிய நோக்கமாக உள்ளதாம்.
நயன்தாரா, காஜல்அகர்வால் பாணிக்கு மாறிய தமன்னா!
நடிகைகளில் ரெண்டு ரகம் உண்டு. சிலர் பணத்திலேயே குறியாக இருப்பர். சிலரோ, நல்ல படமாக இருந்தால் அட்ஜஸ்ட் பண்ணி சம்பளத்தை வாங்கிக்கொள்வார்கள். இதில், நயன்தாரா, காஜல்அகர்வால் ஆகியோர் முதல் ரகம். முன்னணி நடிகரோ, இரண்டாம் தட்டு நடிகரோ யாருடைய படமாக இருந்தாலும் எங்களுக்கான சம்பளம் சரியாக வந்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்கள்.
ஆனால் இந்த விசயத்தில் தமன்னா ஓரளவு விட்டுக்கொடுத்து செல்வார். அஜீத்துடன் வீரம் படத்தில் நடித்தபோதுகூட வாய்ப்பு கிடைத்தால் போதும் என்றுதான் ஓடோடி வந்து கமிட்டானார். ஆனால் இப்போது அவரும் அந்த முதல் ரகத்தில் சேர்ந்து விட்டார்.
இந்தியில் தான் நடித்த ஹிம்மத்வாலா, ஹம்சகல்ஸ் படங்கள் தோல்வியடைந்தபோது அடக்கி வாசித்து வந்தவர், கடைசியாக அக்சய்குமாருடன் நடித்த எண்டர்டெயின்மென்ட் படம் ஹிட்டடித்த பிறகுதான் இப்படி சம்பள விசயத்தில் கறாராகி விட்டார்.
அதாவது, லிங்குசாமியின் இயக்கத்தில் பையா படத்தில் நடித்த அவர், அதையடுத்து லிங்குசாமி தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கயிருந்த ரஜினி முருகன் படத்தில் நடிப்பதாக இருந்தது.
ஆனால் முதலில் சம்மதம் சொல்லியிருந்த தமன்னா, இப்போது முன்பு வாங்கியதை விட டபுள் மடங்கு சம்பளம கேட்கிறாராம். இதனால் அப்படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறதாம். தங்களது படஜெட்டுக்குள் தமன்னா அடங்கினால் அவர்தான் நாயகியாம். இல்லையேல், வேறு நடிகைதானாம்.

வாலு படக்குழு மீது ஹன்சிகா கோபம்!
சிம்புவுடன் இணைந்து ஹன்சிகா வேட்டை மன்னன், வாலு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் வாலு படத்தில் நடித்தபோது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்து சில மாதங்களிலேயே உதிர்ந்து போனது.
அதனால் அதன்பிறகு சிம்புவுடன் நடிக்க மறுத்தார் ஹன்சிகா. இருப்பினும், ஒரு படத்தில் கமிட்டான பிறகு அதை முடித்து கொடுத்தே ஆக வேண்டும் என்று நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து மீண்டும் படத்தை முடித்துக்கொடுக்க முன்வந்தார் ஹன்சிகா. ஆனபோதும் இன்னமும் வாலு படப்பிடிப்பு முடியவில்லை. இதையடுத்து, வாலு படத்தில் இனி நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் ஹன்சிகா.
இதுபற்றி அவர் விடுத்துள்ள செய்தியில், வாலு படத்துக்காக இதுவரை 80 நாட்களுக்கு மேல் கால்சீட் கொடுத்துள்ளேன். ஆனால் இன்னமும் படத்தை முடிக்கவில்லை. அதோடு, கடைசியாக ஒரு பாடல் காட்சியை படமாக்க 3 நாட்கள் கேட்டனர். அவர்கள் கேட்ட தேதியில் எனக்கு வேறு பட வேலைகள் இருந்தும்கூட, அவர்கள் கேட்ட தேதியை ஒதுக்கிக்கொடுத்தேன். ஆனால், குறித்த நாளில் படப்பிடிப்பு நடத்தாமல் ரத்து செய்து விட்டனர். இதனால் நான் கொடுத்த 3 நாட்கள் கால்சீட்டும் வீணாகி விட்டது.
இப்படி பலமுறை அவர்கள் என் கால்சீட்டை வீணடித்து உள்ளனர். அதனால் இனிமேல் வாலு படத்தில் நடிக்க கால்சீட் கேட்டால் நான் கொடுப்பதாக இல்லை என்று கோபத்துடன் கூறுகிறார் ஹன்சிக.

இந்திய படங்களில் நடிக்க ஆசை...! ஐ பட ஆடியோ விழாவில் அர்னால்டு பேச்சு
இந்தியா அழகான நாடு, ஷங்கர் போன்ற இயக்குநர்களின் இயக்கத்திலும், இந்திய படங்களிலும் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று ஐ படத்தின் ஆடியோ விழாவில் பேசினார் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு.
ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில், விக்ரமின் மாறுபட்ட மற்றும் மிரட்டும் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஐ. விக்ரம் ஜோடியாக மதராசப்பட்டினம் ஹீரோயின் எமி ஜாக்சன் நடித்துள்ளார்.
இவர்கள் தவிர்த்து மறைந்த நடிகர் சிவாஜின் மூத்த மகன் ராம்குமார், மலையாள நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாகி வந்த இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. தீபாவளிக்கு படம் ரிலீஸாக இருக்கிறது. இதனிடையே இப்படத்தின் முதல் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் விக்ரமின் தோற்றத்தை பார்த்து அனைவரும் மிரட்டும் போய் உள்ளனர்.
அர்னால்டு வருகை
இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பங்கேற்றார். ஐ படத்தின் ஆடியோ விழாவுக்காக தனி விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
டீசர் வெளியீடு
விழாவில் ஐ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் பிரமாண்ட திரையில் வெளியிடப்பட்டது.
ரஹ்மானின் இசை நிகழ்ச்சி
ஐ படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், விழாவில் இசை நிகழ்ச்சி நடத்தினார். ரஹ்மான் உடன் பின்னணி பாடகர்கள் கார்த்திக், ஹரிச்சரண் ஆகியோர் ஐ படத்தின் பாடல்கள் பாடி அசத்தினர்.
விக்ரம்-எமியின் நடனம்
நிகழ்ச்சியின் போது, ஐ படத்தில் இடம்பெற்றுள்ள என்னோடு நீயிருந்தால்... பாடலுக்கு விக்ரமும், எமி ஜாக்சனும் நடனம் ஆடினர். இந்தப்பாடலுக்கு விக்ரம் ஓநாய் மனிதன் போன்ற தோற்றத்தில் வந்தார்.
பாடி பில்டர்களின் சாகசம்
நிகழ்ச்சியின் ஒருபகுதியாக அர்னால்டுக்கு பிடித்த பாடி பில்டிங் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற கலைஞர்கள் தங்களது அழகிய உடற்கட்டை காண்பித்தனர். இதனை அர்னால்டு மிகவும் ரசித்து பார்த்தார்.
இந்திய படங்களில் நடிக்க ஆசை - அர்னால்டு
இந்தியா ஒரு அழகான நாடு, முதன்முறையாக நான் சென்னை வந்துள்ளேன். ஆஸ்கர் பிலிம்ஸ் படங்கள் எல்லாமே பெரிய படங்கள் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன். இந்த விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி. இந்தியாவில் நல்ல நல்ல படங்கள் நிறைய வருகின்றன.
ஐ போன்ற படங்களை பார்க்கும் போது எனக்கும் இந்திய படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது, குறிப்பாக ஷங்கரின் படத்தில் நடிக்க ஆசையாக உள்ளது. சென்னை மக்களின் அன்பு பிடித்து இருக்கிறது, நான் மீண்டும் சென்னைக்கு வருவேன் என்று பேசினார்.
குவிந்த திரை நட்சத்திரங்கள்
விழாவில், நடிகர் ரஜினிகாந்த், கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார், லட்சுமி ராய், சிபிராஜ், பவர்ஸ்டார் சீனிவாசன், விஜய் அமலாபால், லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா தனுஷ், செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆடியோ வெளியீடு
ஐ படத்தின் ஆடியோ சிடியை வெளியிடுவதற்கு முன்பாகவே மேற்சொன்ன வார்த்தைகளை பேசிவிட்டு கிளம்பிவிட்டார் அர்னால்டு. இதனால் ஐ படத்தின் இசை தட்டை கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் வெளியிட ரஜினி பெற்றுக்கொண்டார். இவர்களோடு ரஹ்மான், பாடலாசிரியர்கள், கபிலன், மதன்கார்கி, ஷங்கர் உள்ளிட்ட ஐ படத்தின் குழுவினர் பங்கேற்றனர்.
பாதியில் வெளியேறிய அர்னால்டு - அர்னால்ட்டை வீணடித்த படக்குழு
ஐ படத்தின் விழாவுக்கு, எதற்காக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு அழைக்கப்பட்டாரோ அதை படக்குழுவினர் வீணடித்துவிட்டனர். சுமார் 6 மணிக்கு துவங்க வேண்டிய நிகழ்ச்சி 8 மணிக்கு தான் துவங்கியது. மேலும் நிகழ்ச்சிக்கான நிரலும் சரிவர அமைக்கப்படாததால் படத்தின் ஆடியோ சிடியை வெளியிடுவதற்கு முன்பாகவே அர்னால்டு கிளம்பிவிட்டார்.

நயன்தாராவுடன் நடிக்க பரத்துக்கு ஆசை!
ஒரு காலத்தில் ரஜினியுடன் நடித்த நயன்தாரா. இப்போதெல்லாம் உடன் நடிக்கும் ஹீரோ யார் என்றெல்லாம் பார்ப்பதில்லை. கதையும், தன்னோட கேரக்டரும் நன்றாக இருக்கிறதா, கேட்கிற சம்பளம் தருகிறார்களா என்று மட்டுமே பார்க்கிறார். உதயநிதி ஸ்டாலினுடன் இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்தார். தற்போது நண்பேன்டா படத்தில் நடித்து வருகிறார்.
தன் மாஜி காதலன் சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார். ராஜா ராணியில் ஜெய் ஜோடியாக நடித்தார், தற்போது ஒரு திகில் படத்தில் நெடுஞ்சாலை ஆரிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
அடுத்து விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். நயன்தாராவின் இந்த மாற்றம் இரண்டாவது வரிசை ஹீரோக்களையும் அவருடன் நடிக்கும் ஆசையை தூண்டிவிட்டிருக்கிறது. அப்படி ஆசைப் படுகிறவர்களில் ஒருவர் பரத்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சினிமாவுக்கு வந்து 12 வருடமாகி விட்டது வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்திருக்கிறேன். இதுவரை பெரிய ஸ்டார் வேல்யூ கிடைக்கவில்லையே என்று வருந்தவில்லை. என் உழைப்பை கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். எப்போது வேண்டுமானலும் அது கிடைக்கலாம்.
என் மனதில் மூன்று ஆசைகள் உள்ளது. என்னை அறிமுகப்படுத்திய ஷங்கர் சார் டைரக்ஷனில் மீண்டும் ஒருமுறை நடிக்க வேண்டும். எந்த ஹீரோவின் கலரையும் மாற்றிவிடும் கவுதம் மேனன் சார் படத்தில் நடிக்க வேண்டும். என் கனவு தேவதை நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும். இந்த மூன்றும் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்கிறார் பரத்.

தேனாண்டாள் பிலிம்சுடன் இணைந்து அரண்மனை படத்தை வெளியிடும் உதயநிதி
சுந்தர்.சி. இயக்கத்தில் திரில்லர் படமாக உருவாகி விரைவில் வெளிவரவிருக்கும் புதிய படம் ‘அரண்மனை’. இப்படத்தில் வினய், ஹன்சிகா மோத்வானி, ராய் லட்சுமி, ஆண்ட்ரியா, சந்தானம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரின் வரவேற்பை பெற்றுள்ளன. இப்படத்தை விஷன் ஐ மீடியாஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்நிலையில், செப்டம்பரில் வெளியாகவிருக்கும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக என்.ராதா மற்றும் ராமநாராயணன் இணைந்து இப்படத்தை வெளியிடயிருந்தனர். ஆனால் தற்போது இவர்களுடன் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்து வெளியிடவுள்ளனர்.
இப்படம் செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

விஜய் சேதுபதியை காதலித்தேன்: சமந்தா அதிரடி
சித்தார்த், சமந்தா காதல் தான் இப்போதைய ஹாட் டாபிக். இருவரும் “ஆமா காதலிக்கிறோம். கல்யாணம் பண்ணிக்க போறோம்” என்று சொல்லவில்லை. ஆனாலும் கோவிலுக்கு ஒன்றாக சென்று பரிகார பூஜை செய்கிறார்கள். பட விழாக்களில் ஜோடியாக கலந்து கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்கிறார்கள்.
“நாங்கள் காதலிக்கவில்லை” என்றும் சொல்லவில்லை.இந்த நிலையில் “பீட்சா படம் பார்த்துவிட்டு விஜய் சேதுபதியை காதலிக்க ஆரம்பிச்சேன்” என்று அடுத்த அதிரடியை வெளியிட்டிருக்கிறார் சமந்தா. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: விஜய் சேதுபதியோட பெரிய ரசிகை நான். அவரைப் பார்த்து பொறாமைப் படுகிறேன்.
பீட்சா படம் ரிலீசானப்போ பிரண்ட்சுங்கல்லாம் வற்புறுத்தி அந்தப் படத்துக்கு கூட்டிட்டு பேனாங்க. சும்மா வேண்டா வெறுப்பாத்தான் அந்தப் படத்தை பார்த்தேன். முதல் 15 நிமிடத்திலிருந்தே விஜய் சேதுபதியோட நடிப்பை பார்த்து மிரண்டுவிட்டேன்.
அப்போதிருந்தே அவரை காலிக்க ஆரம்பிச்சிட்டேன்.விஜய் சேதுபதி ஒவ்வொரு படத்திலேயும் வித்தியாசமாக நடிக்கிறார். அவருடன் நடிக்க ஆசை. நல்ல கதை அமைந்தால் அவருடன் சேர்ந்து நடிப்பேன். ஆனாலும் அவர் நடிக்கும் படத்தில் எல்லோரையும் விட அவர் ஸ்கோர் பண்ணிவிடுவார் என்கிற தயக்கமும் இருக்கிறது” என்கிறார் சமந்தா.
“விஜய்சேதுபதி தற்போது நயன்தாராவுடன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அடுத்து சமந்தாவும் நடிக்க ஆசைப்படுகிறார். மற்ற டாப் ஹீரோக்களின் காதில் புகை வருகிற மாதிரி இருக்கிறது விஜய் சேதுபதியின் வளர்ச்சி.
விஜய் சேதுபதியை காதலிக்க ஆரம்பித்ததாக சமந்தா விளையாட்டுக்காக சொல்லி இருந்தாலும் சித்தார்த்துக்கு சின்ன அதிர்ச்சியாகத்தான் இருக்கும்” என்கிறார்கள் சினிமா பார்வையாளர்கள்.

Popular Posts
-
சிம்புவுக்கு ஏற்ற சரியான ஜோடி ஆண்ட்ரியா தான் என தயாரிப்பாளரும், நடிகருமான வி.டி.வி.கணேஷ் கூறியுள்ளார். தயாரிப்பாளராக இருந்த வி.டி.வி.க...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
யார் கண் பட்டுச்சோ, தொடர்ந்து மொக்கைப் படங்களாக் கொடுத்திட்டு இருக்கிற கார்த்தி சின்ன வயசுல எப்படி இருந்திருப்பார்? ஸ்கூலுக்கு டவுசர் பாக்...
Powered by Blogger.