நடிகைகளில் ரெண்டு ரகம் உண்டு. சிலர் பணத்திலேயே குறியாக இருப்பர். சிலரோ, நல்ல படமாக இருந்தால் அட்ஜஸ்ட் பண்ணி சம்பளத்தை வாங்கிக்கொள்வார்கள். இதில், நயன்தாரா, காஜல்அகர்வால் ஆகியோர் முதல் ரகம். முன்னணி நடிகரோ, இரண்டாம் தட்டு நடிகரோ யாருடைய படமாக இருந்தாலும் எங்களுக்கான சம்பளம் சரியாக வந்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்கள்.
ஆனால் இந்த விசயத்தில் தமன்னா ஓரளவு விட்டுக்கொடுத்து செல்வார். அஜீத்துடன் வீரம் படத்தில் நடித்தபோதுகூட வாய்ப்பு கிடைத்தால் போதும் என்றுதான் ஓடோடி வந்து கமிட்டானார். ஆனால் இப்போது அவரும் அந்த முதல் ரகத்தில் சேர்ந்து விட்டார்.
இந்தியில் தான் நடித்த ஹிம்மத்வாலா, ஹம்சகல்ஸ் படங்கள் தோல்வியடைந்தபோது அடக்கி வாசித்து வந்தவர், கடைசியாக அக்சய்குமாருடன் நடித்த எண்டர்டெயின்மென்ட் படம் ஹிட்டடித்த பிறகுதான் இப்படி சம்பள விசயத்தில் கறாராகி விட்டார்.
அதாவது, லிங்குசாமியின் இயக்கத்தில் பையா படத்தில் நடித்த அவர், அதையடுத்து லிங்குசாமி தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கயிருந்த ரஜினி முருகன் படத்தில் நடிப்பதாக இருந்தது.
ஆனால் முதலில் சம்மதம் சொல்லியிருந்த தமன்னா, இப்போது முன்பு வாங்கியதை விட டபுள் மடங்கு சம்பளம கேட்கிறாராம். இதனால் அப்படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறதாம். தங்களது படஜெட்டுக்குள் தமன்னா அடங்கினால் அவர்தான் நாயகியாம். இல்லையேல், வேறு நடிகைதானாம்.
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
