Your Ad Here

பாலிவுட்டில் கால் பதிக்கும் விஷால்!

விஷாலின் திரைப்பயணத்தை பாண்டியநாடுக்கு முன்பு , பாண்டியநாடுக்கு பின்பு என இரண்டாக பிரித்துக்கொள்ளலாம். காரணம், அவர் பாண்டியநாடு படத்தில் இருந்துதான் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார்.

விஷால் பிலிம் பேக்டரி என்ற பட நிறுவனத்தை தொடங்கி தான் நடிக்கும் படங்களை தயாரித்து வருபவர், தற்போது தனது நண்பன் விஷ்ணு நடித்துள்ள ஜீவா படத்தையும் வாங்கி வெளியிடுகிறார். அதோடு, இன்னொரு நண்பரான விக்ராந்தை வைத்து ஒரு படமும் தயாரிக்கிறார்.

இந்த நிலையில், தனக்கு நண்பராக இல்லாதபோதும், சதுரங்க வேட்டை படத்தில் நாயகனாக நடித்த நடராஜை வைத்தும் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறார் விஷால். அதற்கு முன்னோட்டமாக, விஷ்ணு நடித்துள்ள ஜீவா படத்தில் அவரை ஒரு பாடலுக்கு நடனமாட வைத்திருக்கிறார்.
மேலும், நடராஜை வைத்து விஷால் படம் தயாரிப்பதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உள்ளதாம். அதாவது நடராஜ் தமிழை விட இந்தியில்தான் அதிக படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். அதனால் அங்கு அவருக்கு ஓரளவு பெயர் உள்ளதாம்.

அதனால் அவரை வைத்து ஒரு படம் தயாரித்தால் அநத் படத்தை பாலிவுட்டிலும் வெளியிட்டு, தனது விஷால் பிலிம் பேக்டரியை பாலிவுட்டுக்கும் அறிமுகம் செய்து விடலாம் என்பதே விஷாலின் முக்கிய நோக்கமாக உள்ளதாம்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்