Your Ad Here

மதயானைக்கூட்டம் ஜாதியை உயர்த்தி பிடிக்கும் படமா? - இயக்குனர் விளக்கம்


    இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலுமகேந்திராவின் உதவியாளர் விக்ரம் சுகுமார் டைரக்ட் செய்கிறார். இந்தப் படம் உசிலம்பட்டி, தேனி பகுதிகளில் பெரும்பான்மையாக வாழும் ஒரு சமூகத்தினரை உயர்த்தி பிடித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதுபற்றி இயக்குனர் விக்ரம் சுமார் அளித்துள்ள விளக்கம், தேனி வட்டாரக் கதைதான். ஆனால எந்த ஜாதியையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ சொல்லவில்லை. கேரக்டர்களின் பெயர்கள் ஜாதியோடு வருவதால் அப்படித் தெரியலாம். தேனி பகுதி மக்கள் அன்பையும், கோபத்தையும் ஒரே மாதிரி வெளிப்படுத்துகிறவர்கள். அவர்களின் வாழ்க்கை, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், திருவிழாக்களை அப்படியே பதிவு செய்திருக்கிறோம். ஒரு துரோகத்தால் ஒரு குடும்பம் எப்படி மாறிப்போகிறது என்கிற கதை. ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகாது என்கிற மெசேஜ் இருக்கும். பாடல்கள் அனைத்தையும் நேட்டிவிட்டி பாடகர்களே பாடியிருக்கிறார்கள். இது ஒரு புதிய முயற்சி. என்றார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்