Your Ad Here

கத்தி பாடலுக்கு பாராட்டு தெரிவித்த சிம்பு!

ஆரம்பத்தில் தன்னை ரஜினி ரசிகராகக் காட்டிக்கொண்ட சிம்பு, கடந்த சில வருடங்களாக தன்னை ஒரு அஜித் ரசிகர் என்று சொல்லி வருகிறார். அதை எந்த இடத்திலும் மறைக்காமல் வெளிப்படுத்தி வரும் சிம்பு, அவ்வப்போது தனக்கு விஜய்யும் நண்பர்தான் என்றும் சொல்வார்.

கத்தி பாடல்கள் குறித்து, கத்தி பாடல்கள் சூப்பராக வந்திருப்பதாகவும், அனிருத் பின்னியிருக்கிறார் என்றும், கத்தி டீமுக்கு என் வாழ்த்துக்கள் என்றும் ட்வீட் பண்ணி இருக்கிறார் சிம்பு.
நாளை, அதாவது செப்டம்பர் 18 அன்று கத்தி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவிருக்கிறது.

அனிருத்தும் சிம்புவும் நண்பர்கள் என்ற வகையில் கத்தி படத்தின் பாடல்கள் வெளியாவதற்கு முன்பே சிம்புவிற்கு போட்டுக் காட்டியுள்ளார் அனிருத். பாடல்களைக் கேட்டுவிட்டு அனிரத்தை வெகுவாகப் பாராட்டிய சிம்பு, தன்னுடைய பாராட்டு வெளி உலகத்துக்கும் தெரியட்டுமே என்ற நல்லெண்ணத்தில் அதை ட்வீட் பண்ணி இருக்கிறார்.

மற்றொரு ட்வீட்டில் அனிருத்… உன்ன நினைச்சா சந்தோஷமா இருக்குடா… எல்லா பாட்டும் சூப்பரா இருக்கு… குறிப்பா செஃல்பி புள்ள… சூப்பர்!. வாழ்த்துகள்! என்றும் வாசித்திருக்கிறார். அனிருத்தை மட்டுமல்ல, கத்தி படத்தின் நாயகனான விஜய்யை குறிப்பிட்டு, தலைவா விஜய்… தல ஃபேன்தான்… ஆனா தலைக்கனம் இல்லாத ஃபேன்! என்றும் ட்வீட் பண்ணி இருக்கிறார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்