ஒரு காலத்தில் ரஜினியுடன் நடித்த நயன்தாரா. இப்போதெல்லாம் உடன் நடிக்கும் ஹீரோ யார் என்றெல்லாம் பார்ப்பதில்லை. கதையும், தன்னோட கேரக்டரும் நன்றாக இருக்கிறதா, கேட்கிற சம்பளம் தருகிறார்களா என்று மட்டுமே பார்க்கிறார். உதயநிதி ஸ்டாலினுடன் இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்தார். தற்போது நண்பேன்டா படத்தில் நடித்து வருகிறார்.
தன் மாஜி காதலன் சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார். ராஜா ராணியில் ஜெய் ஜோடியாக நடித்தார், தற்போது ஒரு திகில் படத்தில் நெடுஞ்சாலை ஆரிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
அடுத்து விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். நயன்தாராவின் இந்த மாற்றம் இரண்டாவது வரிசை ஹீரோக்களையும் அவருடன் நடிக்கும் ஆசையை தூண்டிவிட்டிருக்கிறது. அப்படி ஆசைப் படுகிறவர்களில் ஒருவர் பரத்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சினிமாவுக்கு வந்து 12 வருடமாகி விட்டது வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்திருக்கிறேன். இதுவரை பெரிய ஸ்டார் வேல்யூ கிடைக்கவில்லையே என்று வருந்தவில்லை. என் உழைப்பை கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். எப்போது வேண்டுமானலும் அது கிடைக்கலாம்.
என் மனதில் மூன்று ஆசைகள் உள்ளது. என்னை அறிமுகப்படுத்திய ஷங்கர் சார் டைரக்ஷனில் மீண்டும் ஒருமுறை நடிக்க வேண்டும். எந்த ஹீரோவின் கலரையும் மாற்றிவிடும் கவுதம் மேனன் சார் படத்தில் நடிக்க வேண்டும். என் கனவு தேவதை நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும். இந்த மூன்றும் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்கிறார் பரத்.
Popular Posts
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
ஒரு படத்தில் நடித்து அப்படம் வெளியான பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பதை கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் கடந்த ஆண்டு வரை கடைபிடித்த...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். எஸ்.டி.நேசன் டைரக்ட...
-
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் மழலை குரல் இன்றைய இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ...
-
அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.