Your Ad Here

பண்ணையாரும் பத்மினியும் பாடல் வெளியீடு

மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடித்துள்ளனர். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.யூ.அருண்குமார் இயக்கி உள்ளார். ஐஸ்டின் பிரபாகரன் இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், இயக்குனர்கள் கரு.பழனியப்பன், ராம், ஆர்.வி.உதயகுமார், சீனு ராமசாமி, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாடல்களை தெலுங்கு நடிகர் நானி வெளியிட்டார். தயாரிப்பாளர் எம்.ஆர்.கணேஷ் வரவேற்றார். இயக்குனர் அருண்குமார் நன்றி கூறினார்.பின்னர் படம் பற்றி இயக்குனர் கூறியதாவது:ஒவ்வொரு மனிதனுக்கும் அவனோடு தொடர்புடைய ஓர் உயிரற்ற பொருள் மீது சின்னதாக அன்பு இருக்கும். 70 மற்றும் 80& களில் பத்மினி பியட் கார் மீது, அதை வாங்கும் தகுதி கொண்டவர்களுக்கு  அன்பு இருந்தது. இந்த களத்தில் சொல்லப்படும் கதை. கிராமத்து பண்ணையாருக்கு பத்மினி கார் என்றால் உயிர். அதன் டிரைவருக்கு பண்ணையார் என்றால் உயிர். அந்த கார் அவரை விட்டுச் செல்லும் சூழ்நிலையில் என்ன நடக்கிறது என்பது கதை. காமெடிக்கும், காதலுக்கும், சென்டிமென்டுக்கும் சம பங்கு இருக்கிறது.


Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்