Your Ad Here

சலீம் பட டைரக்டரை ஐதராபாத்துக்கு அழைத்த நடிகர் வெங்கடேஷ்!

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் சலீம். இந்த படத்தை புதுமுக இயக்குனர் நிர்மல் குமார் இயக்கியிருந்தார். டில்லி மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை தழுவி, அரசியல் முலாம் தடவி எடுக்கப்ட்ட இந்த படம் ஓரளவு வெற்றி பெற்றதால், இப்போது நிர்மல்குமாருக்கு சான்ஸ் கொடுக்க சிலர் முன்வந்துள்ளனர்.

முக்கியமாக, அந்த படத்தை பார்த்து சூர்யா உள்ளிட்ட சில ஹீரோக்கள் அவருக்கு வாழ்த்து சொல்லி எனர்ஜி கொடுத்திருக்கிறார்கள். அதையடுத்து, முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை தயாரித்த எல்ரட் குமார், தனது நிறுவனத்துக்கு ஒரு படம் இயக்கித்தருமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம். தவிர மேலும் சில நிறுவனங்களும் பேச்சுவார்த்தையில் உள்ளார்களாம்.
இதற்கெல்லாம் மேலாக, சலீம் படத்தைப்பார்த்த தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், நிர்மல்குமாரை ஐதராபாத்துக்கு அழைத்து சலீம் படத்தை தெலுங்கில் என்னை வைத்து ரீமேக் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளாராம்.

இதனால் சந்தோசத்தில் திக்குமுக்காடிப்போயிருக்கிறார் நிர்மலகுமார். மேலும், மலையாள த்ரிஷ்யம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை ஸ்ரீப்ரியாவின் இயக்கத்தில் வெங்கடேஷ் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்