தமிழில் தற்போதுதான் முன்னணி இடத்தைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறார் சமந்தா. அவர் நடித்து சில வாரங்களுக்கு முன் வெளிவந்த ‘அஞ்சான்’ படம் அவருக்குப் பெரிதாகக் கைகொடுக்கவில்லை என்றாலும், அவரைப் பற்றி பேச வைத்துவிட்டது. இருந்தாலும் விஜய் ஜோடியாக நடித்து வரும் ‘கத்தி’ படத்தைத்தான் தற்போது பெரிதும் எதிர்பார்த்து வருகிறார். விக்ரம் ஜோடியாகவும் ‘பத்து எண்ணுறதுக்குள்ளே’ படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.
இதனிடையே தமிழில் அவர் ஒரு படத்தை தயாரிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு இயக்குனர் சமந்தாவைச் சந்தித்துக் கதை சொல்லியிருக்கிறார். அந்தக் கதை சமந்தாவுக்கு மிகவும் பிடித்துப் போக அவரே இந்தப் படத்தைத் தயாரிக்கிறேன் என்றும் சொன்னாராம். மிகவும் குறைந்த செலவில் எடுக்கப்பட உள்ள இந்தப் படத்தில் சமந்தா நடிக்கப் போவதில்லை.
படத்திற்கு எவ்வளவு பட்ஜெட் ஆகும் , எத்தனை நாட்களில் படப்பிடிப்பு முடியும் போன்ற விவரங்களை சமந்தா கேட்டிருப்பதாகவும், அந்தத் திட்டமிடல் முடிந்த பின் அது பற்றி சமந்தா முடிவெடுப்பார் என்றும் தெரிகிறது.
இன்றைய தலைமுறையில் விஷால், சூர்யா போன்ற ஹீரோக்கள்தான் தற்போது தயாரிப்பாளர்களாக மாறி வருகிறார்கள். அவர்களோடு படம் தயாரிக்கும் இன்றைய தலைமுறை ஹீரோயினாக சமந்தாவும் சேருவாரா என்பது இன்னும் கொஞ்ச நாட்களில் தெரிந்துவிடும்.
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
