Your Ad Here

ராஜபக்ஷேவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை - சென்னையில் கத்தி தயாரிப்பாளர் பேட்டி!

கத்தி படம் தொடர்பாக தமிழ் அமைப்புகளுடன் பேச தயார், எனக்கும் ராஜபக்ஷேவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என லைகா படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ் கரண் அல்லிராஜ், சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். துப்பாக்கி படத்திற்கு பிறகு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ''கத்தி''. விஜய் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். லண்டனை சேர்ந்த லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

விஜய்யின் சமீபத்திய படங்ளை போன்று ''கத்தி'' படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தமுறை கிளம்பியிருக்கும் எதிர்ப்பு சற்று சிக்கலானது. அதாவது படத்தை தயாரித்திருக்கும் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரண் அல்லிராஜ், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் நெருங்கிய உறவினர் என்று கூறி தமிழகத்தில், மாணவர்கள் அமைப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று அவர்கள் போர்க்கொடி பிடித்துள்ளனர்.

இந்நிலையில் கத்தி படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரண் அல்லிராஜ், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், ஐரோப்பா வாழ் தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு என்னைப்பற்றி தெரியும். இலங்கை தமிழர்களுக்கு நான் நிறைய உதவி செய்துள்ளேன். எனது தாயார் ஞானம் பெயரில் அறக்கட்டளை தொடங்கி, இலங்கை தமிழர்களின் நலனுக்காக பல்வேறு உதவிகளை செய்துள்ளேன். ஆரம்பத்தில் லைகா நிறுவனம் ஞானம் புரொடக்ஷ்ன்ஸ் பெயரில் இருந்தது. காலப்போக்கில் லைகா பெயரில் நிறைய தொழில்கள் தொடங்கியதால் அதையே தயாரிப்பு நிறுவனத்திற்கும் பெயர் வைத்தால் எல்லோரிடமும் ஈஸியாக ரீச் ஆகலாம் என்று எண்ணி லைகா என பெயர் மாற்றினேன்.
ராஜபக்ஷேவுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழக மக்களுக்கு ராஜபக்ஷே எப்படியோ, அப்படி தான் எனக்கும் அவர். ராஜபக்ஷே இந்த படத்தை தயாரிக்க பண உதவி செய்ததாக கூறுகிறார்கள், என்னுடைய இரண்டு நாள் வருமானம் இந்த கத்தி படத்தின் மொத்த தயாரிப்பு, அப்படி இருக்கையில், அவர் ஏன் எனக்கு பண உதவி செய்யப்போகிறார். எனது போட்டியாளர்கள் தான் தேவையில்லாமல் பிரச்னையை கிளப்பி கத்தி படத்தை எதிர்க்கின்றனர்.

தற்போது கத்தி படத்தை எதிர்ப்பவர்கள் சுயவிளம்பரத்திற்காக படத்தை எதிர்க்கின்றனர். இதுதொடர்பாக நானும் யாரிடமும் பேச தயாராக இருக்கிறேன். தமிழக மக்களுக்கு நான் எப்போதும் துரோகம் செய்ய மாட்டேன். நான் ஒரு தமிழன், அதனால் தமிழ் படங்கள் எடுக்க எண்ணினேன், தொடர்ந்து நிறைய தமிழ் மற்றும் இந்தி படங்களை எடுப்பேன். கத்தி படத்தின் இசை வெளியீடு செப். 18ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கு உங்களது ஆதரவு தேவை. கத்தி படம் தீபாவளிக்கு உறுதியாக ரிலீஸாகும்.
இவ்வாறு பேசினார் அல்லிராஜ்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்