Your Ad Here

புதிய படங்களுக்கு கதை கேட்பதை நிறுத்திய அனுஷ்கா!

தென்னிந்திய சினிமாவில் விஜயசாந்திக்கு பிறகு ஒரு அதிரடி நடிகையாக உருவெடுத்தவர்தான் அனுஷ்கா. அருந்ததி படத்தில் அவர் நடித்த அதிரடி வேடம் அவரது இன்னொரு முகத்தை வெளிப்படுத்தியது.

ஆனபோதும் அதன்பிறகு சிலகாலம் திறமைக்கு தீனி போட சரியான படங்கள் இல்லாமல் வழக்கான கதாநாயகிகளைப்போன்று மரத்தை சுற்றியே டூயட் பாடிக்கொண்டிருந்த அனுஷ்காவுக்கு, ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி என்ற இரண்டு பெருந்தீனி படங்கள் கிடைத்தன.

அதனால், அந்த சரித்திர கால படங்களுக்காக சில பண்டைகால போர்ப்பயிற்சிகளை பயிற்சி எடுத்து நடித்துள்ளார். அதோடு, தமிழில் அவர் இதுவரை ஜோடி சேராமல் இருந்த ரஜினி, அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பும் இப்போதுதான் அனுஷ்காவுக்கு கிடைத்திருக்கிறது. ஆக, தற்போது அவரது கைவசம் 4 மெகா படங்கள் உள்ளன. நான்கு படங்களுமே இறுதிகட்டத்தில் இருப்பதால், ஒன்றன்பின் ஒன்றாக திரைக்கு வரவும் தயாராகிக்கொண்டிருக்கின்றன.

அதனால் இந்த படங்கள் ரிலீசாகும் நேரத்தில் தமிழ், தெலுங்கில் அனுஷ்காவின் மார்க்கெட் இன்னும் எகிறி விடும் என்பதால், அவரிடம் இப்போதே கதையை சொல்லி கால்சீட் வாங்கி விட வேண்டும் என்று சில இயக்குனர்கள், அனுஷ்காவை முற்றுகையிட்டனர். ஆனால், தன்னை மையப்படுத்திய கதைகளாக இருந்தபோதும், அவற்றை கேட்கும் நிலையில் அனுஷ்கா இல்லையாம்.

தற்போது, நடித்து வரும் படங்கள் முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன். அதன்பிறகு நான் நடிப்பேனா மாட்டேனா என்பதை இப்போது எதுவும் சொல்ல முடியாது என்று கூலாக சொல்லி டைரக்டர்களை திருப்பி அனுப்பி வருகிறாராம் அனுஷ்கா.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்