Your Ad Here

விஜய் சேதுபதியை காதலித்தேன்: சமந்தா அதிரடி

சித்தார்த், சமந்தா காதல் தான் இப்போதைய ஹாட் டாபிக். இருவரும் “ஆமா காதலிக்கிறோம். கல்யாணம் பண்ணிக்க போறோம்” என்று சொல்லவில்லை. ஆனாலும் கோவிலுக்கு ஒன்றாக சென்று பரிகார பூஜை செய்கிறார்கள். பட விழாக்களில் ஜோடியாக கலந்து கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்கிறார்கள்.

“நாங்கள் காதலிக்கவில்லை” என்றும் சொல்லவில்லை.இந்த நிலையில் “பீட்சா படம் பார்த்துவிட்டு விஜய் சேதுபதியை காதலிக்க ஆரம்பிச்சேன்” என்று அடுத்த அதிரடியை வெளியிட்டிருக்கிறார் சமந்தா. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: விஜய் சேதுபதியோட பெரிய ரசிகை நான். அவரைப் பார்த்து பொறாமைப் படுகிறேன்.

பீட்சா படம் ரிலீசானப்போ பிரண்ட்சுங்கல்லாம் வற்புறுத்தி அந்தப் படத்துக்கு கூட்டிட்டு பேனாங்க. சும்மா வேண்டா வெறுப்பாத்தான் அந்தப் படத்தை பார்த்தேன். முதல் 15 நிமிடத்திலிருந்தே விஜய் சேதுபதியோட நடிப்பை பார்த்து மிரண்டுவிட்டேன்.

அப்போதிருந்தே அவரை காலிக்க ஆரம்பிச்சிட்டேன்.விஜய் சேதுபதி ஒவ்வொரு படத்திலேயும் வித்தியாசமாக நடிக்கிறார். அவருடன் நடிக்க ஆசை. நல்ல கதை அமைந்தால் அவருடன் சேர்ந்து நடிப்பேன். ஆனாலும் அவர் நடிக்கும் படத்தில் எல்லோரையும் விட அவர் ஸ்கோர் பண்ணிவிடுவார் என்கிற தயக்கமும் இருக்கிறது” என்கிறார் சமந்தா.

“விஜய்சேதுபதி தற்போது நயன்தாராவுடன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அடுத்து சமந்தாவும் நடிக்க ஆசைப்படுகிறார். மற்ற டாப் ஹீரோக்களின் காதில் புகை வருகிற மாதிரி இருக்கிறது விஜய் சேதுபதியின் வளர்ச்சி.

விஜய் சேதுபதியை காதலிக்க ஆரம்பித்ததாக சமந்தா விளையாட்டுக்காக சொல்லி இருந்தாலும் சித்தார்த்துக்கு சின்ன அதிர்ச்சியாகத்தான் இருக்கும்” என்கிறார்கள் சினிமா பார்வையாளர்கள்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்