கேரளா திருச்சூரைச்சேர்ந்த ஹெலன்தான் நடிகை ஓவியா. களவாணி படத்துக்காக மலையாள படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த அவரை தமிழுக்கு கொண்டு வந்து கதாநாயகி ஆக்கினார் டைரக்டர் சற்குணம்.. ஆனால் களவாணி படம் மெகா ஹிட்டானபோதும் அதன்பிறகு சரியான படங்களை தேர்வு செய்யத் தெரியாமல் சில படங்களில் கமிட்டானார் ஓவியா.
அந்த படங்கள் திரைக்கு வராமல் போனதோடு ஓவியாவின் மார்க்கெட்டை கவிழ்த்து விட்டன.
இருப்பினும் தொடர்ந்து போராடிய ஓவியா, சுந்தர்.சியின. கலகலப்பு படத்தில் அயிட்டம் நடிகை போன்று அஞ்சலியுடன் இணைந்து கவர்ச்சிக்கோதாவில் குதித்தார். அதிலிருந்து அவ்வப்போது ஒரு படத்தில் நடித்தபடி தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டு வருகிறார். தற்போது சீனி, சண்டமாருதம் ஆகிய படங்களில நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பாரதிராஜா தயாரிப்பில், அகத்தியன் இயக்கி வரும் படத்திலும் ஒரு வேடத்தில் நடிக்க கமிட்டானார் ஓவியா. ஆனால், அந்த படத்தின் நாயகியாக டைரக்டர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமியே பின்னர் ஒப்பந்தம் ஆனதால் அதிர்ச்சியாகி விட்டாராம் ஓவியா. மற்ற நடிகைகள் ஹீரோயின் என்றாலும தனக்கு ஓரளவு நடிக்க சான்ஸ் தருவார்கள்.
ஆனால் இப்போது டைரக்டரின் மகளே கதாநாயகி என்கிறபோது நமக்கு நடிக்க காட்சிகளே இருக்காது. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டை போன்று தன்னை ஓரங்கட்டி விடுவார்கள் எனறு உஷாராகி விட்ட ஓவியா, இரண்டு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர் பின்னர் அப்படத்திலிருந்தே விலகி விட்டாராம். அதனால் ஓவியா கேரக்டருக்கு வேறு நடிகை தேடி வருகிறார்கள்.
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
