Your Ad Here

கவுண்டமணி படத்தின் டிரைலர் செப்டம்பர் 12-ம் தேதி வெளியீடு

காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘49 ஓ’ படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இப்படத்தை கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த ஆரோக்கியதாஸ் இயக்கியுள்ளார். அரசியல் அமைப்புப் பிரிவில் வாக்களிக்க விரும்பாதவர்கள் பயன்படுத்தும் 49-ஓ என்ற உரிமை குறித்த கதையம்சம் இதில் காணப்பட்ட போதிலும் முழுக்க முழுக்க காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் கவுண்டமணி ஒரு விவசாயியாக வந்து அவர்களது பிரச்சனைகளை எடுத்துரைப்பதாகக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் டிரைலரை செப்டம்பர் 12-ம் தேதி வெளியிடவுள்ளனர்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்