Your Ad Here

இறுதி கட்டத்தில் ஜில்லா


          விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். எஸ்.டி.நேசன் டைரக்ட் செய்கிறார். மதுரையை கதைக் களமாக கொண்டு தயாராகிறது.

சமீபத்தில் பாடல்காட்சிகளுக்காக ஜப்பான் சென்று விட்டு வந்தது ஜில்லா டீம். இதுபற்றி இயக்குனர் எஸ்.டி.நேசன் கூறியதாவது: பாடல் காட்சிகளுக்காக ஜப்பான் சென்றோம். அங்கு க்யோட்டா என்ற மலை நகரில் உள்ள புஷிமி இனாரி என்ற புத்த கோவிலில் ஷூட்டிங் நடத்தினோம். இது மலை உச்சியில் உள்ள கோவில்.

இதுவரை ஒரு ஹாலிவுட் படம் மட்டுமே இங்கு ஷூட்டிங் நடத்தி உள்ளது. ரசிகர்களுக்கு நல்ல விஷூவல் டின்னர் காத்திட்டிருக்கு. இரண்டு பெரிய ஹீரோக்களை இயக்கினாலும் இரண்டு புதுமுகங்களை இயக்குறமாதிரி தான் இருக்கு. பெரும்பாலான ஷூட்டிங் முடிந்து விட்டது. இறுதி கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. இதற்காக அங்கு அரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது என்றார்.

ஜில்லா பொங்கலுக்கு ரிலீஸாகிறது!

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்