Your Ad Here

பொங்கலுக்கு கோச்சடையான் களமிறங்குவாரா? சீரியஸ் டிஸ்கஷன்!!


  2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிருந்தது. ஆனால், யாருமே எதிர்பாராத வகையில், திடீரென்று ஜனவரி 10-ந்தேதியே கோச்சடையான் வெளிவரயிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதனால் விஜய், அஜீத் படங்களுக்கிடையே முக்கிய தியேட்டர்களை கைப்பற்றும் வேலைகள் தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில், ரஜினி படமும் திரைக்கு வர இருப்பதை அறிந்த சில தியேட்டர் அதிபர்கள் தங்கள் தியேட்டரில் எந்த படத்தை ரிலீஸ் செய்வது என்பதில் குழம்பிப்போயிருக்கிறார்கள். இதனால் தியேட்டர்களை கைப்பற்றுவதில் இன்னும் பலத்த போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது.

ஆனால், இப்படி மூன்று பிரபல நடிகர்களின் படங்களும் ஒரே நேரத்தில் வெளிவருவது வசூல்ரீதியாக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று சில முக்கியஸ்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதனால் கோச்சடையானை பொங்கலுக்கு பிறகு வெளியிடலாமா? என்று சம்பந்தப்பட்டவர்கள் விவாதித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி கோச்சடையான ஆடியோவை வெளியிடும்போது படத்தின் ரிலீஸ் பற்றிய தகவலை வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்