Your Ad Here

தமிழ் படத்தில் சன்னி லியோன்: இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு!


    பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்திப் படத்தில் பரத்துடன் நடித்து வருகிறார். அவரை இப்போது தமிழ் படத்துக்கும் கொண்டு வருகிறார்கள்.

தயாநிதி அழகிரி தயாரிக்கும் வடகறி படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுவதற்கு சன்னி புக் செய்யப்பட்டிருக்கிறார். அப்படியே தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க சன்னி திட்டமிட்டிருக்கிறார். நீலப்பட நடிகையின் தமிழ் வருகைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் "சன்னி லியோன் போன்ற நீலப்பட நடிகைகளை அனுமதித்தால் தமிழ்நாடு நீலப்பட நடிகைகள் சுதந்திரமாக நடமாட வசதியாகிவிடும். நீலப்படங்கள் தவறானதல்ல என்ற கருத்து உருவாகிவிடும். இது தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழ் கலாச்சாரத்துக்கே முரணாகிவிடும். ஒரு போதும் சன்னி லியோன் தமிழ் படத்தில் நடிப்பதை அனுமதிக்க மாட்டோம். அதை உரிய வகையில் தடுத்து நிறுத்துவோம்" என்று கூறியிருக்கிறார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்