Your Ad Here

அனுஷ்கா பரபரப்பு பேட்டி - நிச்சயம் காதல் திருமணம் தான்


     என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பில் முற்றிலும் வித்தியாசமாக, பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ‘இரண்டாம் உலகம்’. இப்படம் வருகிற நவ., 22ம் திகதி ரிலீஸாகிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனுஷ்கா, இரண்டாம் உலகம் படம் முற்றிலும் வித்தியாசமான படம்.

இப்படத்தில் லவ், எமோஷன் என எல்லாமே இருக்கு. குறிப்பாக இப்படத்தில் சண்டைக்காட்சிகளில் எல்லாம் நான் நடித்துள்ளேன். ஜார்ஜியா காட்டிற்குள், தனியாக சண்டை பயிற்சியாளர் வைத்து எனக்கு சண்டையெல்லாம் கற்றுக் கொடுத்து இப்படத்தில் நடிக்க வைத்தனர்.

பொதுவாக ஆர்யா கூட நடிக்க எல்லா நடிகைகளும் விரும்புவாங்க, நானும் அப்படித்தான். ஆர்யாவிட்டு பிரியாணியை ரொம்பவே நான் மிஸ் பண்றேன். இருந்தாலும் அடுத்தமுறை கண்டிப்பாக பிரியாணியை ருசித்து விடுவேன்.

தெலுங்கில் அருந்ததீ, ருத்ரமாதேவி போன்ற வரலாற்று படங்களில் நடிக்கிறேன். தமிழிலும் அதுபோன்று வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். நான் சினிமாவுக்கு வந்ததில் இருந்து இப்போது வரைக்கு என் கல்யாணத்தை பற்றி பேசிக்கிட்டே இருக்காங்க.

என் கல்யாணத்திற்கான நேரம் வரும்போது அதை நானே அறிவிப்பேன். நிச்சயமாக எனது கல்யாணம் காதல் கல்யாணமாகத்தான் இருக்கும்.

இரண்டாம் உலகம் படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களுக்கும் இப்படம் ஒரு மிகப்பெரிய இடத்தை கொடுக்கும் என்றார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்