ரஜினியின் அட்வைசுக்கு பிறகு உஷாரான கோலிவுட் ஹீரோக்கள்!
ஒரு படத்தில் நடித்து அப்படம் வெளியான பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பதை கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் கடந்த ஆண்டு வரை கடைபிடித்து வந்தனர். ஆனால், கும்கி படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, ஒரே நேரத்தில் இரண்டு மூன்று படங்களில் நடிப்பதுதான் சரியானது. காரணம், மூன்று படங்களில் நடிக்கிறபோது அதில் இரண்டு தோல்வியடைந்தாலும் ஒரு படம் வெற்றி பெற்று மார்க்கெட்டை காப்பாற்றி விடும் என்று இன்றைய இளவட்ட ஹீரோக்களுக்கு தனது சார்பில் அனுபவரீதியான அறிவுரையை வழங்கினார்.
அதையடுத்துதான், ஒரு படத்தில் நடித்து அதன் ரிசல்ட்டை பார்த்து விட்டு அடுத்த படத்தில் கமிட்டான விஜய், அஜீத் போன்ற ஹீரோக்கள், ஒரு படத்தில் நடித்து முடித்ததும் அந்த படம் ரிலீசாவதற்கு முன்பே அதற்கடுத்த படத்தில் நடிக்கத் தொடங்கி விட்டனர்.
அதேபோல், பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகின்றனர். இவர்களில் விக்ரம் பிரபு நடிப்பில் கும்கி மட்டுமே வெளிவந்திருக்கிறது. ஆனால் இப்போது இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, அரிமா நம்பி, தலப்பாகட்டி, எழில் இயக்கும் படம் என 5 படங்களில் நடித்து வருகிறார்.
மணிரத்னத்தின் கடல் படத்தில் அறிமுகமான கெளதம் கார்த்திக, வை ராஜா வை, சிப்பாய், நானும் ரவுடிதான், என்னமோ ஏதோ என நான்கு படங்களில் நடித்து வருகிறார். இவர்களைப்பார்த்து இப்போது ஜெய் போன்ற நடிகர்களும் அதிகப்படியான படங்களை கைப்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
