
சேலம் கண்காணிப்பு படையினர் நேற்று (மே 24) பொறிவைத்து திருட்சி விசிடியை பிடித்தனர். சேலம் பகுதியில் கோச்சடையான் திருட்டு விசிடி விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது.
சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் பழனிவேல் தலைமையில் ரசிகர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கினர். சேலம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு சிடி கடையில் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுவதை கண்டு அதை கண்காணித்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் பெரிய பார்சல் ஒன்றை கொண்டு வந்த ஒருவர் கடைக்குள் நுழைந்தார். அவரை பின் தொடர்ந்து சென்ற ரசிகர்கள் அந்த பார்சலை கைப்பற்றி பிரித்து பார்த்தபோது அதில் சுமார் 500 கோச்சடையான் திருட்டு விசிடிக்கள் இருந்தன.
உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் சிடிக்களை கைப்பற்றி கடை உரிமையாளரையும், ஊழியர்களையும் கைது செய்தனர். தமிழ்நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள்.