Your Ad Here

இந்திக்கு செல்கிறார் காஜல்அகர்வால்!

வடஇந்திய நடிகைகளான குஷ்பூ, ஜோதிகா, சிம்ரன், தமன்னா, காஜல்அகர்வால், ஹ்ன்சிகா என பல நடிகைகளுக்கு தென்னிந்தியா சினிமாதான் லக்காக அமைந்தது.அதனால் தங்களது தாய்மொழியான இந்தியில் நடிப்பதைகூட தவிர்த்து தமிழ், தெலுங்கு படங்களிலேயே அதிகமாக நடித்து வந்தனர். நடித்தும் வருகின்றனர்.

அந்த வரிசையில், தமன்னா, தற்போது இரண்டு இந்தி படங்களில் நடித்து வரும் நிலையில், காஜல்அகர்வாலும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு தலா ஒரு படத்தில் நடித்து வரும் அவருக்கு இங்கு எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதால், இந்த மரியாதையோடு பாலிவுட்டில் துண்டு போட்டு இடம் பிடித்து விடுவோம் என்று கடந்த சில மாதங்களாகவே முயற்சி எடுத்து வந்தார்.

அதன்காரணமாக 3 இடியட்ஸ் படத்தில் நடித்த சர்மான் ஜோஷியுடன் ஒரு படத்தில் தற்போது இணைந்துள்ளார்.

ஈரானிய படமான சீஸ்பயர் என்ற படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் காஜல் மட்டுமே சிங்கிள் ஹீரோயினாம் அதனால், ஏற்கனவே ஸ்பெசல்-26, சிங்கம் ரீமேக் ஆகிய இந்தி படங்களில் நடித்து ஓரளவு பெயரெடுத்துள்ள காஜல்அகர்வால், இந்த படம் மூலம் இந்தியில் இன்னும் ஆழமாக காலூன்றி விட வேண்டும் என்றும் தீவிரமடைந்துள்ளார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்