சினிமாவில் நடித்தது ஏன்? பாலுமகேந்திரா விளக்கம்
இயக்குனர் பாலுமகேந்திரா நீண்ட இடைவெளிக்கு பிறகு டைரக்ட் செய்திருக்கும் படம் தலைமுறைகள். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே அவர்தான். தாத்தாவுக்கும், மகனுக்குமான உறவைச் சொல்லும் படத்தில் அவரே தாத்தாவாகவும் நடித்திருக்கிறார். இதுவரை ஒரு படத்தில் ஒரு காட்சியில்கூட நடித்திராத பாலுமகேந்திரா இப்போது நடித்தது ஏன்? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:
இந்த தலைமுறை இழந்து வருகிற மிகப்பெரிய சொத்து உறவுகள். அதை மக்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் தலைமுறைகள் ஸ்கிரிப்ட் எழுதினேன். எழுதி முடித்தவுடன் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது ஏன் நாம் நடித்தால் என்ன என்று தோன்றியது. இந்த கதைக்கு நான் பொருத்தமாகத்தானே இருப்பேன் என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டதோடு எனக்கு நானே போட்டோ ஷூட் நடத்திப் பார்த்து ஓகே என்று தோன்றியதும் நடித்தேன்.
மேலும் இது மிகச் சின்ன பட்ஜெட் படம். மற்றவர்களை நடிக்க வைத்தால் அவர்களுக்கு தனியாக சம்பளம் கொடுக்கணும், அவர்களுக்கு வசதிகள் செய்து தரணும், நடிப்பை வரவழைக்கணும், இவற்றை தவிர்க்கத்தான் நடித்தேன். இதுல நான் நடிச்சிருக்கேன் என்கிறத விட இயல்பா வந்துட்டு போறேன்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும். மற்றபடி என் முகத்தை பெரிய ஸ்கிரீன்ல பார்க்குற ஆசையெல்லாம் இல்லை. ஏன்னா என் முகம் எப்படின்னு எனக்கு நன்றாகவே தெரியும்.இவ்வாறு பாலுமேந்திரா கூறியுள்ளார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.