Your Ad Here

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான சவுந்தர்யாவின் சொத்து யாருக்கு?


      ஹெலிகாப்டர் விபத்தில் பலியான சவுந்தர்யாவின் கோடிக்கணக்கான சொத்து யாருக்கு என்பதில் அவரது அம்மா, அண்ணிக்கு இடையே பிரச்னை எழுந்தது. பொன்னுமணி, சேனாதிபதி, காதலா காதலா, படையப்பா, தவசி, சொக்க தங்கம் உள்பட பல்வேறு தமிழ் படங்கள் மற்றும் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்தவர் சவுந்தர்யா. கடந்த 2004ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்துக்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.

அப்போது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் சவுந்தர்யா, உடன் சென்ற சகோதரர் அமர்நாத் பலியாகினர். சவுந்தர்யா இறந்த பிறகு அவரது சொத்து யாருக்கு என்று குடும்பத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. சவுந்தர்யாவின் கணவர் ரகு, சவுந்தர்யாவின் தாயார் மஞ்சுளா, அமர்நாத் மனைவி நிர்மலா அவரது மகன் சாத்விக் ஆகியோரிடையே சொத்து பிரச்னை வலுத்தது.

இந்நிலையில் சவுந்தர்யா இறப்பதற்கு  முன் உயில் எழுதி வைத்திருந்ததாகவும் அதன்படி சொத்து தங்களுக்கு சேர வேண்டும் என்று மஞ்சுளா தரப்பிலும், சவுந்தர்யா உயில் எழுதவில்லை. அது போலியான பத்திரம் என்று நிர்மலா தரப்பிலும் கூறப்பட்டது. இதையடுத்து பெங்களூர் 4வது மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட் முன்னிலையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தற்போது இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டுள்ளது. சவுந்தர்யா சம்பாத்யத்தில் வாங்கப்பட்ட பலகோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் இருதரப்பினரும் ஏற்கும் வகையில் பேசி தீர்க்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் சவுந்தர்யா உயில் போலியானது என்று நிர்மலா தரப்பில் தொடரப்பட்ட வழக்கு மட்டும் நிலுவையில் உள்ளது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்