Your Ad Here

ரஜினி மகளுக்கு அதிர்ச்சி தந்த பிரியா ஆனந்த்


  ஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனது படத்துக்கான காதல் காட்சியை படமாக்க ஜப்பான் சென்றார். ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா 3 படத்தை இயக்கினார். இதையடுத்து வை ராஜா வை படத்தை இயக்கி வருகிறார். இதில் கார்த்திக் மகன் கவுதம், பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது. சமீபத்தில் ஐஸ்வர்யாவின் பிறந்த தினத்தை கவுதம் மற்றும் பிரியா ஆனந்த் பட குழுவினருடன் இணைந்து கொண்டாடினார்கள்.

சஸ்பென்சாக பெரிய கேக் வரவழைத்து ஐஸ்வர்யாவை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் பிரியா. அந்த கேக் வெட்டி அவர் பிறந்த தினம் கொண்டாடினார். தற்போது வை ராஜா வை பட குழுவினருடன் ஐஸ்வர்யா ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் முகாமிட்டிருக்கிறார். கவுதம், பிரியா நடிக்கும் காதல் டூயட் காட்சியை படமாக்குகிறார். இப்படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஜப்பானில் ரஜினி ரசிகர்கள் ஏராளம். அவரது மகள் ஐஸ்வர்யா வந்திருப்பதை அறிந்து ரஜினி ரசிகர்கள் அவரை சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்டனர்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்