Your Ad Here

பிரியாணிக்காக பஞ்சாப் நடிகையை லெக் பீஸாக்கிய வெங்கட்பிரபு!


    மங்காத்தாவைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கியுள்ள படம் பிரியாணி. கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் தொடங்கப்பட்டபோது உட்கட்சி பூசல் போல் தயாரிப்புத்துறைக்கும், டைரக்டருக்குமிடையே சலசலப்புகள் தோன்றிக்கொண்டேயிருந்தது. அதே சலசலப்பு இப்போது படத்தை ரிலீஸ் செய்யும்போதும் ஏற்பட்டிருக்கிறது. படத்தை பார்த்த தணிக்கைக்குழுவினர் ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் நிறைய ஆபாச காட்சிகள் உள்ளதால் சான்றிதழ் கொடுக்க தயங்கினார்களாம். அதன்காரணமாகவே ரிவைசிங் கமிட்டிக்கு சென்றிருக்கிறார்கள், ஆனால் அங்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் யு/ஏ சான்றோடு படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.

இந்த அளவுக்கு சென்சார்போர்டு கெடுபிடி செய்ததற்கு என்ன காரணம்? என்று விசாரித்துப்பார்த்தால், கதைப்படி இப்படத்தில் பெண் பித்தனாக நடித்துள்ளாராம் கார்த்தி. அதனால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஆபாசம் தலைதூக்கியுள்ளதாம. குறிப்பாக, இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பஞ்சாப் நடிகை மாண்டி தாக்கர் என்பவரை உரித்த கோழியாக்கி விட்டார்களாம். அவரை லெக் பீஸாக வைத்துதான் சுவையான பிரியாணியே கிண்டியிருக்கிறாராம் வெங்கட்பிரபு.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்