நாய் இறந்த துக்கத்தில் அழுத த்ரிஷாவுக்கு சித்தார்த் ஆறுதல் கூறினார். விலங்குகள் மீது அன்பு செலுத்தும் நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. குறிப்பாக தெரு நாய்களுக்கு அடைக்கலம் தருபவர். பீட்டா என்ற விலங்குகள் நல அமைப்பில் உறுப்பினராக இருக்கும் அவர் அடிக்கடி முகாம்களில் பங்கேற்று நாய்களை பாதுகாக்கும்படி அறிவுரை வழங்குவதுடன் அவற்றுக்கு முறைப்படி மருத்துவ உதவிகள் அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கையும் விடுத்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன் ஐதராபாத்தில் நடந்த ஷூட்டிங்கில் பங்கேற்ற த்ரிஷா பரிதாபமாக திரிந்த தெருநாய் ஒன்றை எடுத்து அதற்கு கட்பரி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.
சமீபத்தில் அந்த நாய் இறந்துவிட்டது. அதைக்கண்டு துக்கம் தாளாமல் கதறி அழுதார் த்ரிஷா. பிறகு அதை அடக்கம் செய்தார். இதுபற்றி இணைய தள டுவிட்டர் பக்கத்தில் த்ரிஷா கூறும்போது,கட்டு(செல்ல நாய்)நீ இல்லாமல் நான் எப்படி என் வேலைகளை செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. உன்னை அடக்கம் செய்தபோது என்னில் ஒரு பகுதியை உன்னுடன் சேர்த்து அடக்கம் செய்துவிட்டேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். த்ரிஷாவின் சோகத்துக்கு பலர் இணையதளம் மூலம் அவருக்கு ஆறுதல் கூறினர்.
குறிப்பாக நடிகர் சித்தார்த் அவருக்காக தனது டுவிட்டர் பக்கத்தில் ஆறுதல் வார்த்தைகள் கூறி இருக்கிறார். த்ரிஷா உங்களது செல்லப் பிராணி இறந்ததை அறிந்து துக்கம் அடைந்தேன். இறந்துபோன கட்பரி, நாய்களுக்கான சொர்க்கத் தில் சந்தோஷமாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்.