Your Ad Here

அஞ்சலி இழப்பால் ஸ்ரீதிவ்யாவுக்கு லாபம்


  அஞ்சலி நடித்த கதாபாத்திரத்தில் மீண்டும் அவர் நடிக்க முடியாத நிலை இருப்பதால் அந்த வாய்ப்பு ஸ்ரீதிவ்யாவுக்கு போனது. சுந்தர். சி இயக்கத்தில் விமல்-அஞ்சலி, சிவா-ஓவியா நடித்த படம் கலகலப்பு. இப்படம் வெற்றி பெற்றதையடுத்து அதன் 2ம் பாகத்தை இயக்க சுந்தர் சி. திட்டமிட்டிருக்கிறார். தற்போது அரண்மனை  படத்தின் ஷூட்டிங்கில் சுந்தர்.சி பிஸியாக இருக்கிறார். இப்படத்தையடுத்து கலகலப்பு பார்ட் 2 இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த மற்ற நட்சத்திரங்கள் 2ம் பாகத்தில் நடிக்க சம்மதித்துள்ள நிலையில் அஞ்சலியின் கால்ஷீட் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறதாம்.

சித்தியின் கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறி ஆந்திராவுக்கு சென்றார் அஞ்சலி. தற்போது தமிழ் படங்கள் எதுவும் ஏற்காமல் தெலுங்கு படங்களில¢ மட்டுமே நடித்து வருகிறார். சுந்தர் சி. பலமுறை முயன்றும் அஞ்சலியிடம் பேச முடியவில்லையாம். அவர் கால்ஷீட்டுக்கு ஓகே சொன்னாலும் ஏற்கனவே உள்ள பிரச்னைகளால் பட ஷூட்டிங் பாதிக்கும் என்று சுந்தர் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. இதையடுத்து அஞ்சலி நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ரீதிவ்யாவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.

இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அறிமுகமானவர். தற்போது பென்சில் படத்தில் நடிக்கும் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். அஞ்சலிக்கு செல்லவேண்டிய வாய்ப்பு அவரிடமிருந்து நழுவியது, ஸ்ரீதிவ்யாவுக்கு லாபமாக அமைந்துவிட்டதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்