Your Ad Here

பைக் ஓட்டினார் ஹன்சிகா


   பாடல் காட்சிக்காக பயிற்சி எடுத்து ஹெவி பைக் ஓட்டி நடித்தார் ஹன்சிகா. சொந்த பிரச்னைகள் ஆட்டிப்படைத்தாலும் ஷூட்டிங்கிற்கு மட்டம்போடாமல் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா. சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் மான் கராத்தே படத்துக்காக புதுச்சேரியில் நடித்து வருகிறார். பாடல் காட்சி ஒன்றில் அவர் நடிப்பதற்காக வெளிநாட்டு பைக்குகள் வரவழைக்கப்பட்டன. ஒவ்வொன்றும் 500 சிசி திறன் கொண்ட ஹெவி பைக்.

இந்த பைக்குகளைத்தான் ஓட்டி நடிக்க வேண்டும் என்று இயக்குனர் திருமுருகன் கூறியவுடன் ஷாக் ஆன ஹன்சிகா, இந்த பைக்குகளையா? கண்டிப்பாக பயிற்சி எடுத்த பிறகுதான் நடிக்க முடியும் என்றார். இதையடுத்து கடற்கரையொட்டிய சாலையில் மணிக்கணக்கில் பைக் ஓட்டி பழகினார். அதன்பிறகே நடித்தார். இது பற்றி இயக்குனர் திருமுருகன் கூறும்போது, ஹன்சிகா பைக் ஓட்டுவதுபோல் பாடல் சீனுக்காக படமாக்கப்பட்டது. சென்னை பாஷையில் பாடல் எழுதப்பட்டது.

இதற்காக அமெரிக்கன் சோப்பர், கார்வடிவில் இணைக்கப்பட்ட பெட்டியுடன் கூடிய பைக், உயரமான பைக், 500 சி சி திறன்கொண்ட புல்லட் உள்ளிட்ட 5 ஹெவி பைக் வரவழைக்கப்பட்டது. முதலில் அதை ஓட்ட பயந்த ஹன்சிகா பயிற்சிக்கு பிறகு ஓட்டினார் என்றார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்