சமந்தாவுக்கு மீண்டும் தோல்நோய் பாதிப்பு
நடிகை சமந்தாவை கடந்த சில ஆண்களுக்கு முன்பு தோல்நோய் தாக்கியது. அதிக மின்சார வெளிச்சத்திலும், வெயிலிலும் நடிப்பது அவருக்கு அலர்ஜியாக இருந்தது. உடம் முழுவதும் சிவப்பு கொப்பளங்கள் ஏற்பட்டு அவஸ்தைப்பட்டார். 6 மாதங்கள் வரை வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த காலகட்டத்தில் மணிரத்தினத்தின் கடல், ஷங்கரின் ஐ பட வாய்ப்புகளை இழந்தார்.
சமந்தாவுக்காக காத்திருந்தவர்கள் வேறு நடிகையை வைத்து படத்தை முடித்து ரிலீஸ் பண்ணிவிட்டார்கள். இருந்தாலும் மனம் தளராத சமந்தா பூரண குணம் அடைந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு அவர் நடித்த தெலுங்கு படங்கள் ஹிட்டானது. சித்தார்த்தும், சமந்தாவும் காதலித்து வருகிறார்கள். விரைவில் அவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது என்கிற பேச்சும் உண்டு.
இந்த நிலையில் மீண்டும் அவர் லிங்குசாமி தயாரிப்பு மற்றும் டைரக்ஷனில் உருவாகும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் தொடங்கியது. 10 நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் சமந்தாவை மீண்டும் தோல்நோய் தாக்கியது. முதலில் அவரது முகத்தில் சிவப்பு புள்ளிகள் தோன்ற ஆரம்பித்தது. பிறகு உடம்பில் சிவப்பு கொப்பளங்கள் தோன்றியது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அனைவரும் சென்னை திரும்பி விட்டனர். சமந்தா பூரண நலம்பெற இன்னும் ஒரு சில வாரங்கள் ஆகலாம் என்கிறார்கள். அதனால் அவர் இல்லாத காட்சிகளை அடுத்த வாரம் முதல் படமாக்க திட்டமிட்டிருக்கிறார்கள். சமந்தா குணமானதும் அவரது உடல் நிலைக்கேற்ப காட்சிகளில் மாற்றம் செய்து படப்பிடிப்பை தொடர இருக்கிறார்கள்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
