Your Ad Here

ஹீரோயினை சுற்றி வளைத்த யானை


    ஆணைகட்டி மலைப்பகுதியில் நடந்த ஷூட்டிங்கின்போது ஹீரோயினை யானைகள் சுற்றி வளைத்ததால் அலறியடித்து ஓடினர். இந்த சம்பவம்பற்றி என் ஓவியா பட இயக்குனர் பி.செல்வகுமார் கூறியதாவது: கோவை அருகே ஆணைகட்டி மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள காட்டேஜில் கிளப் டான்ஸ் படமாக்கப்பட்டது. ஹீரோயின் சோனியா செரிஸ்டருடன் நடன பெண்கள் கலந்துகொண்டனர். திடீரென்று 4 யானைகள் ஷூட்டிங் இடத்துக்கு வந்து பட குழுவினரை சூழ்ந்துகொண்டது.

அதைப்பார்த்ததும் பட குழுவினர் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். அன்றைய தினம் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. மறுநாள் அதே இடத்துக்கு வந்து ஷூட்டிங் நடத்தினோம். இப்படத்தில் ஜானி, சோனியா செரிஸ்டர் ஜோடியாக நடிக்கின்றனர். வி.டி.குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ரவிராகவ் இசை அமைக்கிறார். பிரதீஷ்குமார், ஜெய்லாப்தீன், சரவணா, செல்வகுமார் தயாரிக்கின்றனர். ஐதராபாத், கோவை, பொள்ளாச்சி, கும்பகோணம் போன்ற இடங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்