Your Ad Here

அடுத்த ஆண்டில் திருமதி ஆகிறார் த்ரிஷா!


     லேசா லேசா படத்தில் கதாநாயகியாக அறிமுகமான த்ரிஷா, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இடம்பிடித்து வருகிறார். அவருக்குப்பிறகு வந்த எத்தனையோ நடிகைகள் சில வருடங்களோடு வெளியேறினாலும், த்ரிஷா போன்ற சில நடிகைகள் மட்டுமே நீண்டகாலம் நீடித்து நடித்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் த்ரிஷா. ஆனால் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளுமே முடிந்து விட்டது.

அதனால் அடுத்தபடியாக புதிய படங்களுக்காக தொடர்ந்து கல்லெறிந்து வந்தார் த்ரிஷா. இருப்பினும் புதிய வரவு நடிகைகளான லட்சுமிமேன்ன, நஸ்ரியா, ஸ்ரீதிவ்யா போன்றவர்கள் வேகமாக படவாய்ப்புகளை கைப்பற்றிக்கொள்வதால், த்ரிஷா போன்ற மேல்தட்டு நடிகைகளை யாரும் கண்டுகொள்வதே இல்லை.

இந்த நிலையில், சிம்புவை வைத்து கெளதம்மேனன் இயக்கி வரும் படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் என்று யாரோ சொல்லக்கேட்டு, அப்படின்னா சிம்பு நடிக்கும்போது நமக்கும் அழைப்பு வரத்தானே செய்யும் என்றுகூட நப்பாசையில் இருந்திருக்கிறார் த்ரிஷா. ஆனால், அதுவும் இப்போது இந்தி நடிகை பல்லவிக்கு சென்றுவிட்டது.

அதனால் இனிமேல் நமக்கு சினிமா சான்ஸ் கிடைப்பது அரிது என்ற முடிவுக்கு வந்து விட்டாராம் த்ரிஷா. அதனால் இதுவரை கல்யாணம் சம்பந்தமாக பேச்செடுத்தாலே முகத்தை திருப்பிக்கொண்ட த்ரிஷா, இப்போது, க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம். அதனால், மகளின் சிக்னலுக்காகவே கடந்த ஆண்டிலிருந்தே காத்திருந்த த்ரிஷாவின் தாய்குலம், மாப்பிள்ளை தேடும் படலத்தை தீவிரப்படுத்தியுள்ளாராம். அநேகமாக அடுத்து ஆண்டில் த்ரிஷா திருமதி ஆகி விடுவார் என்று தெரிகிறது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்