Your Ad Here

கோவா படவிழாவில் படம் பார்க்க முடியாமல் போன கமல்!


     44வது கோவா சர்வதேச திரைப்பட விழா இந்தாண்டு நவ. 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடந்தது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார். மூன்று நாட்களுக்கு மேலாக கோவா திரைப்பட விழாவில் கலந்து கொண்டாலும் அவரால் எந்த படங்களையும் பார்க்க முடியவில்லை. திரைப்பட விழாவின் துவக்க நாள் விழா, அதனைத்தொடர்ந்து பிலிம் பஜார் துவக்க விழா, இந்தியன் பனோரமா விழா, மீடியா சந்திப்பு, வி.வி.ஐ.பி.க்கள் சந்திப்பு, எங்கும் ரசிகர்கள், திரைப்பட கலைஞர்கள் என ரொம்பவே பிஸியாக இருந்தார். இதனால் அவர் எந்த படத்தையும் பார்க்க முடியவில்லை. இந்தாண்டு நடந்த விழாவில் அதிகமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்ட நபர் இவராகத்தான் இருக்க வேண்டும்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்