Your Ad Here

விஜய் படத்தில் இருந்தும் சமந்தா நீக்கம்?


   சூர்யா, விஜய் படங்களில் இருந்து சமந்தா நீக்கப்படுகிறார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. பாணா காத்தாடி, நான் ஈ, நடுநிசி நாய்கள், நீ தானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சமந்தா. தமிழ், தெலுங்கில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். நான் ஈ படத்துக்கு பிறகு ஷங்கர் இயக்கும் ஐ படத்திலும், மணிரத்னம் இயக்கிய கடல் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அப்போது  தோல் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அந்த  படங்களிலிருந்து விலகினார். 6 மாத சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்த சமந்தா தற்போது படங்களில் முழு வேகத்தில் நடித்து வந்தார்.

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்திலும் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆனார். அதன் ஷூட்டிங் சமீபத்தில் மும்பையில் தொடங்கியது. அதில் சமந்தா பங்கேற்று நடித்து வந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் தோல் அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டார். அதிக வெளிச்சமும், வெப்பமும் உமிழும் விளக்குகளுக்கு நடுவில் நின்று நடித்ததால் அவரது தோலில் அலர்ஜி உண்டானது.  இதையடுத்து ஷூட்டிங்கிலிருந்து சிகிச்சைக்கு புறப்பட்டு சென்றார்.

இதனால்ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு சில நாட்களில் அவர் குணம் அடைந்து ஷூட்டிங் வருவார் என்று பட குழுவினர் தெரிவிக்கின்றனர். ஆனால் குணம் அடைய நீண்ட நாட்கள் ஆகும் பட்சத்தில் மணிரத்னம், ஷங்கர் படத்திலிருந்து நீக்கப்பட்டது போல் சூர்யா படத்திலிருந்தும் சமந்தா நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதேபோல் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஜோடியாக நடிக்கவும் சமந்தா தேர்வாகியுள்ளார். அந்த படமும் அவரது கையை விட்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்