Your Ad Here

மீண்டும் காமெடியனாக மாறுகிறார் கருணாஸ்!


   பாலா இயக்கிய நந்தா படத்தில் லொடுக்குப் பாண்டியாக சினிமாவில் அறிமுகமானவர் கருணாஸ். அதையடுத்து குறுகிய காலத்திலேயே முன்னணி காமெடியனாக வேகமாக வளர்ந்து வந்தவருககு திடீரென்று ஹீரோ ஆசை ஏற்பட்டது. அதன்காரணமாக, திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரத்தில் அம்பானி ஆகிய படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே ஓரளவு வெற்றி பெற்றதால், அதையடுத்து சந்தமாமா, ரகளபுரம், மச்சான் என 3 படங்களில் ஒரே நேரத்தில் ஹீரோவாக நடித்தார் கருணாஸ்.

அதோடு, நல்ல கதைகள் கிடைத்தால் ஒரே நேரத்தில் 10 படங்களில்கூட ஹீரோவாக நடிப்பேன் என்று காமெடி வேடங்களை தவிர்க்கத் தொடங்கினார். ஆனால் அப்படி அவர் தன்னை ஒரு ஹீரோவாக உயர்த்திக்கொள்வதற்காக தேர்ந்தெடுத்து நடித்த சந்தமாமா, ரகளபுரம் ஆகிய படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் ஏற்கனவே காமெடியன் மார்க்கெட் சரிந்த நிலையில், இப்போது ஹீரோ மார்க்கெட்டும் சரிந்து கிடக்கிறது.

அதனால் ஹீரோ வேசத்துக்கு தற்காலிகமாக விடை கொடுத்திருக்கும் கருணாஸ், மீண்டும் காமெடியனாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இதுகுறித்து அவர் சினிமா வட்டாரங்களில் கூறிவந்தபோதும், புதிய படங்களுக்கு அவரை புக் பண்ண யாரும் முனவராத நிலையில், காதலில் விழுந்தேன படத்தை இயக்கிய பிரசாத், தான் இயக்கி வரும் சகுந்தலாவின் காதலன் என்ற படத்தில் வாய்ப்புக் கொடுத்திருக்கிறாராம்.

நீண்ட நாளைக்குப்பிறகு காமெடியாக நடிக்கும் படம் என்பதால், காமெடி ரசிக்கும்படியாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு காட்சியிலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடித்துள்ளாராம். அதைப்பார்த்து படப்பிடிப்பு தளத்திலும் சிரித்தார்களாம். ஆக, இதேபோல் தியேட்டரிலும் ரசிகர்கள் சிரித்து விட்டால், மீணடும் காமெடியில் கல்லா கட்டி விடலாம் என்ற முடிவில் இருக்கிறாராம் கருணாஸ்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்