Your Ad Here

பிரபல சினிமா நடன இயக்குனர் ரகுராம் மாரடைப்பால் காலமானார்!


    பிரபல சினிமா நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டர் மாரடைப்பால் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 69. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடன இயக்குனராக சுமார் 1000 பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளவர் ரகுராம் மாஸ்டர்.

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்தவர். நடன குடும்பத்திலிருந்து வந்தவர். அவரது மனைவி கிரிஜா, மகள்கள் காயத்ரி ரகுராம், சுஜா ரகுராம் ஆகியோரும் நடன இயக்குனர்களாக உள்ளனர்.

மறைந்த ரகுராமின் உடல் சென்னை, மகாலிங்கபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காயத்ரி ரகுராம், வை ராஜா வை படத்தின் பாடல் ஷூட்டிங்கிற்காக பாங்காக் சென்றுள்ளார். தந்தை மறைவுக்கு குறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் வந்த பிறகு, ரகுராமின் இறுதிசடங்கு திங்களன்று(டிச. 2ம் தேதி) நடைபெறுகிறது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்