Your Ad Here

குணம் அடைந்தார் சமந்தா: 7ந் தேதி முதல் ஷூட்டிங்கில் பங்கேற்பு!


  நடிகை சமந்தா தற்போது லிங்குசாமி தயாரித்து டைரக்ட் செய்யும் பெயரிடப்படாத படத்தில் சூர்யாவுடன் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் மும்பையில் நடந்தபோது கடுமையான வெளிச்சத்தின் சூடு தாங்க முடியாமல் அவரது முகத்தில் சிவப்பு புள்ளிகள் தோன்றியது. ஏற்கெனவே தோல்நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றிருந்த சமந்தாவுக்கு மீண்டும் அந்த பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு சமந்தா சிகிச்சை செய்ய சென்றார்.

இதற்கிடையில் சமந்தாவை லிங்குசாமி படத்திலிருந்த நீக்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. இது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் சமந்தா இப்படி கூறியிருந்தார் "என் உடலில் உஷ்ணத்தினால் பாதிப்பு ஏற்பட்டது உண்மைதான். 2 நாள் ஓய்வெடுத்த பிறகு குணமடைந்து விட்டேன். லிங்குசாமி படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நான்தான் நடிக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் "கடுமையான வெயில் மற்றும் உஷ்ணம் காரணமாக சமந்தா பாதிக்கப்பட்டார். இப்போது அவர் முழுமையாக குணமடைந்து விட்டார். வருகிற 7ந் தேதி முதல் அவர் மும்பையில் நடக்கும் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"படத்தில் இருந்து சமந்தாவை நீக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. நீக்கிவிட்டதாக வந்த செய்திகள் தவறானது. அவர்தான் என்பட ஹீரோயின் அதில் எந்த மாற்றமும் இல்லை" என்று லிங்குசாமியும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்