Your Ad Here

ஜெய், நஸ்ரியா இணையும் புதிய படம்


          ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் திருமணம் என்னும் நிக்காஹ். மதங்களை தாண்டி காதல் ஜெயிக்கும் என்கிற கருத்தை மையமாக கொண்டு அனீஸ் டைரக்ட் செய்து வருகிறார். ஜெய், நஸ்ரியா நசிம் நடிக்கிறார்கள். தீக்ஷிதா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஷூட்டிங் வேலைகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.
படத்தின் பாடல்கள் பிரமாதமாக வந்திருப்பதாக டெக்னிக்கல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஜிப்ரான் இசையில் மதன் கார்க்கி, காதல் மதி, முன்னாஜி, பார்வதி, தேன்மொழிதாஸ், கார்த்திக் நேதா, ஆகிய பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதியுள்ளனர். படத்தின் ஆடியோ உரிமைய வாங்க கடும் போட்டி இருந்தது. கடைசியில் பெரும் தொகை கொடுத்து திங் மியூக் வாங்கி விட்டது.

இதுகுறித்து டைரக்டர் அனீஷ் கூறும்போது "ஒரு படத்தின் பாடல்கள் படத்தின் விளம்பரத்திற்கு மிகவும் உதவும். வேறு எந்த விளம்பரத்தையும் விட அது சக்திமிக்கதாக இருக்கும். படத்தின் அத்தனை பாடல்களும் மயில் இறகு கொண்டு வருடுவது போல மென்மையாக இருக்கும். விரையில் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த இருக்கிறோம்" என்றார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்