Your Ad Here

பாண்டியநாடு கொடுத்த தெம்பு! மதகஜராஜாவுக்கு வழிவிட்ட விநியோகஸ்தர்கள்!!


      சமர் படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த படம் மதகஜராஜா. ஆனால் முந்தின சில படங்கள் கையை சுட்டதால் எங்களுக்கு முதலில் பைசல் பண்ணுங்கள், படத்தை வெளியிட வழி விடுகிறோம் என்று முட்டுக்கட்டைப் போட்டனர் விநியோகஸ்தர்கள். அதையடுத்து, பட்டத்து யானைக்கு பிறகு தானே களமிறங்கி படத்தை வெளியே கொண்டு வர முயற்சி எடுத்தார் விஷால்.

ஆனால், இப்போது தாங்களாகவே மதகஜராஜாவிற்கு வழி விடுவதற்கு தயாராகி விடடனர் விநியோககஸ்தர்கள். காரணம், சுசுந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான பாண்டியநாடு பெரிய அளவில் வெற்றி பெற்றிருப்பதால், இந்த நேரத்தில் மதகஜராஜாவை வெளியிட்டால் கணிசமான தொகையை தேற்றி விடலாம் என்று நினைக்கும் விநியோகஸ்தர்கள், பழைய கடன் பற்றி வாய் திறக்காமல், படத்தை வெளியிடுங்கள். மற்றதை அப்புறம் பேசி தீர்த்துக்கொள்வோம் என்று முன்வந்திருக்கிறார்களாம்.

இதையடுத்து, சிலர் பொங்கல் கழித்து வெளியிடலாம் என்று கருத்து சொன்னார்களாம். ஆனால் எப்போதோ வெளியாக வேண்டிய படம். இன்னும் வைத்துக்கொண்டிருந்தால் நமத்து விடும் என்று பொங்கலுக்கு முன்பே வெளியிடுகிறார்களாம். 40 கோடி செலவு செய்து என் படத்தை நானே வெளியிடுகிறேன் என்று தான் களமிறங்கியபோது கிணற்றுக்குள் கல்லாக கிடந்த படம், இப்போது தானாக வெளியே வருவதால் எனக்கு நல்ல நேரம் உதயமாகி விட்டது என்று உற்சாகத்தில் துள்ளி குதிக்கிறாராம் விஷால்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்