தமிழ் சினிமாவில் முன்னணி சினிமா குடும்பத்திலிருந்து வருகிறவர்கள் எவ்வளவு செல்வாக்கோடு இருப்பார்கள் என்பதற்கு சூர்யா, கார்த்தி, விஜய் ஆகியோர் உதாரணமாக இருந்தாலும் இவர்கள் ஆரம்பத்தில் வாரிசு அடையாளத்தோடு அறிமுகமாகி கடுமையாக உழைத்தே தங்கள் இடத்தை பிடித்தார்கள்.
ஆனால் அன்னை இல்லத்தில் இருந்து வந்திருக்கும் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, கார்த்திக் மகன் கவுதம் ஆகியோரின் வாரிசு பலத்தை கண்டு சினிமா வட்டாரமே ஆச்சர்யத்தில் திகைக்கிறது.
விக்ரம் பிரபு கும்கி படத்தில் அறிமுகமானார். கஷ்டப்பட்டு நடித்தார் படமும் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இப்போது எங்கேயும் எப்போதும் சரவணன் டைரக்ஷனில் இவன் வேற மாதிரி படத்தில் நடிக்கிறார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சுரபி ஹீரோயின். அடுத்து யுடிவி தயாரிக்கும் சிகரம் தொடு படத்தில் நடிக்கிறார். தூங்கா நகரம் டைரக்ட் பண்ணிய கவுரவ் இதனை டைரக்ட் செய்கிறார். மோனல் கஜ்ஜார் ஹீரோயின். அடுத்து அரிமா நம்பி. கலைப்புலி தாணு தயாரிப்பில் ஆனந்த் சங்கர் டைரக்ட் பண்ணுகிறார். பிரியா ஆனந்த் ஜோடி. அடுத்த படத்தை விக்ரம்பிரபுதான் ஒத்துக் கொள்ளவில்லை. அட்வான்ஸ் கொடுப்பதற்கே ஆறேழு தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.
விக்ரம் பிரபுவாவது பரவாயில்லை ஒரு ஹிட் கொடுத்தார். ஆனால் கார்த்திக் மகன் கவுதமிற்கோ முதல் படம் கடல் ஃபிளாப். ஆனாலும் அவருக்கு திரும்பிய பக்கமெல்லாம் வாய்ப்புகள் குவியுது. சரவணன் என்பவர் இயக்கும் சிப்பாய் படத்தில் நடிக்கிறார். ராசி நடிகை லட்சுமி மேனன் ஹீரோயின். ரவி பிரசாத் ஸ்டூடியோ தயாரிக்க ரவி தியாகராஜன் இயக்கும் என்னமோ ஏதோ படத்தில் நடிக்கிறார். நிகிஷா படேல், ரகுல் ப்ரீத்தி என இரண்டு ஜோடிகள். ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் வை ராஜா வை படத்தில் நடித்து வருகிறார். ப்ரியா ஆனந்த் ஜோடி. இதுதவிர உதயம் என் எச் 4 படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கும் நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கவும் கமிட் ஆகியிருக்கிறார். இன்னும் பல தயாரிப்பு நிறுவனங்கள் கவுதம் கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றன.
வாரிசு என்ற பலம் இவர்களுக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தாலும் அடுத்தடுத்து வெளியாகும் படங்களில் இவர்கள் வெளிப்படுத்தியிருக்கும் திறமைதான் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பவையாக இருக்கும்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
ஒரு படத்தில் நடித்து அப்படம் வெளியான பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பதை கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் கடந்த ஆண்டு வரை கடைபிடித்த...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். எஸ்.டி.நேசன் டைரக்ட...
-
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் மழலை குரல் இன்றைய இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ...
-
அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.