Your Ad Here

விஜய்யுடன் ஜோடி போட சமந்தா ரெடி


      சூர்யாவை அடுத்து விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் சமந்தா. கவுதம் மேனன் இயக்கவிருந்த புதிய படத்திலிருந்து விலகிய சூர்யா டைரக்டர் லிங்குசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இதையடுத்து விஜய் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் சமந்தா. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘துப்பாக்கி‘ படத்தில் நடித்த விஜய் மீண்டும் அவரது இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இதில்தான் சமந்தா ஹீரோயினாக நடிக்க உள்ளார். விஜய்யுடன் மீண்டும் இணைவதுபற்றி முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருக்கிறார். ‘உண்மையிலேயே இந்த விஷயத்தை பகிர்ந்துகொள்வதில் பரவசம் அடைகிறேன். மீண்டும் விஜய்யுடன் புதிய படத்தில் கைகோர்க்கிறேன்‘ என அதில் குறிப்பிட்டிருக்கிறார். வரும் ஜனவரி மாதம் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளது. அனிரூத் இசை அமைக்க உள்ளார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்