கார்த்தி திடீர் முடிவு -பொங்கலுக்கு முன் ‘பிரியாணி’
கார்த்தி நடிக்கும் ‘பிரியாணி‘ படம் பொங்கலுக்கு முன் ரிலீஸ் ஆகிறது. ராஜேஷ் இயக்கிய ‘அழகுராஜா‘, வெங்கட் பிரபு இயக்கும் ‘பிரியாணி‘ இரண்டு படங்களில் கார்த்தி நடித்து வந்தார். முதலில் எந்தபடத்தை ரிலீஸ் செய்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இரண்டு படங்களிலும் மாறி மாறி நடித்து வந்தார் கார்த்தி. இறுதியில் தீபாவளி தினத்தில் ‘அழகுராஜா‘ படம் ரிலீஸ் ஆனது. அத்துடன் ‘பிரியாணி‘ பட டிரைலர் வெளியிடப்பட்டது. ‘அழகுராஜா‘ படங்கள் ஓடும் தியேட்டரில் ‘பிரியாணி‘ பட டிரைலர் காட்டப்பட்டது. ‘பிரியாணி‘ படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்கு அதிக நாட்கள் எடுத்துக்கொண்டதால் பட ரிலீஸில் தாமதம் ஏற்பட்டதாக யூனிட்டார் தெரிவிக்கின்றனர். வரும் பொங்கல் தினத்தில் படத்தை வெளியிட எண்ணியிருந்தனர். தற்போது அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பொங்கலுக்கு முன்னதாக கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கின்றனர். ‘சென்னை 28‘, ‘மங்காத்தா‘ போன்ற படங்களை இயக்கிய வெங்கட் பிரபுவின் பாணியிலேயே படம் உருவாகி இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இது யுவன் இசை அமைக்கும் 100வது படம்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
