Your Ad Here

மகனை ஹீரோ ஆக்குகிறாரா ஜெயராம்?


  என் மகனை இப்போது சினிமாவில் நடிக்க வைக்கவில்லை என்று நடிகர் ஜெயராம் சொன்னார்.அவர் மேலும் கூறியதாவது:என் மகன் காளிதாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறான். சிறந்த நடிப்புக்காக குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறான். இப்போது சென்னையில் படித்துவருகிறான். அவனுக்கு 19 வயதுதான் ஆகிறது. இப்போதே நடிக்க வைக்க எனக்கு விருப்பம் இல்லை. இது சரியான நேரமும் இல்லை. முதலில் படிப்பு முடியட்டும் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் அவனுக்கு சினிமா வாய்ப்பு வந்துகொண்டுதான் இருக்கிறது. அவன் சரியான விமர்சகன். எனது படங்களைப் பார்த்து விமர்சிப்பான். அதை நான் சீரியசாக எடுத்துக்கொள்வேன்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்