Your Ad Here

கதையை திருடிவிட்டதாக சுசீந்திரன் மீது உதவி இயக்குனர் புகார்


     டைரக்டர் சுசீந்திரன் தனது கதையை திருடிவிட்டதாக புகார் கூறி இருக்கிறார் உதவி இயக்குனர். விஷால், லட்சுமி மேனன் நடித்த படம் பாண்டிய நாடு. சுசீந்திரன் டைரக்டு செய்துள்ளார். கடந்த தீபாவளி தினத்தில் திரைக்கு வந்தது. இப்படத்தின் கதை தன்னுடையது, அதை சுசீந்திரன் திருடிவிட்டதாக புவனராஜன் என்பவர் புகார் தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது,டைரக்டர் சுசீந்திரனிடம் உதவியாளராக பணியாற்றும் பிரபாகரன் என்பவர் எனது நண்பர். சுசீந்திரனின் உதவி இயக்குனர் ஒருவர் என்னை அழைத்து டைரக்டர் புதிய கதை தேடிக்கொண்டிருக்கிறார் என்றார். இதையடுத்து இயக்குனரை சந்தித்து நான் எழுதிய 7 கதைகளை சொன்னேன். மணல் கொள்ளையும் அதனால் நடக்கும் பழிவாங்கும் கதை ஒன்றையும் கூறினேன்.

அதை முழுஸ்கிரிப்ட்டாக எழுதும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் புதிய உதவி இயக்குனர்களை கொண்டு பாண்டிய நாடு பட ஷூட்டிங்கை தொடங்கினார். இது நான் சொன்ன மணல் கொள்ளை கதைதான். கிரானைட் கல் கொள்ளையாக மாற்றி படமாக்கி இருக்கிறார். இதுபற்றி புகார் செய்யவில்லை. ஆனால் நான் ஏமாற்றப்படக்கூடாது என்பதற்காக இதுபற்றி சொல்கிறேன் என்றார்.

இதுபற்றி சுசீந்திரன் கூறும்போது, புவன ராஜன் என்னை சந்தித்தது உண்மைதான். அவரது உழைப்பை பார்த்து உதவி இயக்குனராக சேர்த்துக்கொள்ள எண்ணினேன். சரித்திர கதையை படமாக்க  முடிவு செய்தபோது அதில் அவரை சேர்த்துக்கொண்டேன். பிறகு அந்த படம் டிராப் ஆகிவிட்டது. அதன்பிறகு பாண்டிய நாடு கதையை தொடங்கினேன். இந்த கதையை திருடவில்லை.

அவர் கொடுத்த ஒரு தகவல் தேனி பக்கம் பழிவாங்க எண்ணுபவர்கள் சம்பந்தப்பட்ட ஆளைபிடித்து கை,காலை ஒன்றாக சேர்த்து கட்டிவிடுவார்கள் என்பதுதான். அவர் என் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி இருக்கிறார். இதுபற்றி இயக்குனர்கள் சங்கத்தில் புகார் செய்வேன் என்றார். இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்