
நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம் படங்களின் தோல்வி மற்றும் யோஹன் அத்தியாயம் ஒன்று, துருவநட்சத்திரம் போன்ற படங்கள் கிடப்பில் போடப்பட்டது ஆகிய பிரச்னைகளால், பின்னடைவை சந்தித்தார், டைரக்டர் கவுதம் மேனன். அஜீத், சிம்பு ஆகிய இருவரும், அவரது புதிய படங்களில் நடிக்க ஒப்புதல் தெரிவித்திருப்பதால், மீண்டும் புது எனர்ஜியுடன் களமிறங்கியுள்ளார்.அதில், சிம்பு படத்தை முடித்ததும், பிப்ரவரியில் அஜீத் நடிக்கும் படத்தை துவங்குகிறாராம். தற்போது வீரம் படவேலைகளில் ஈடுபட்டுள்ள அஜீத்திடம், அவர் நடிக்கும் படத்தின் முழு திரைக்கதையையும் கவுதம் மேனன் கொடுக்க, அஜீத்தும், அதை படித்துவிட்டு, டபுள் ஓகே கூறி விட்டாராம்.