Your Ad Here

மொழி தெரிந்தும் டப்பிங் பேச மறுக்கும் அமலாபால்


     மலையாளம் சரளமாக பேச தெரிந்தும் 5 படங்களுக்கு டப்பிங் பேசாமல் தவிர்த்தார் அமலாபால். மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா படங்களில் நடித்திருப்பவர் அமலாபால். தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் சொந்த குரலில் டப்பிங் பேசியதில்லை. தலைவா படத்தில்தான் முதன்முறையாக தனது வேடத்துக்கு டப்பிங் பேசினார்.

மலையாளம் தாய் மொழியாக இருந்தபோதும் அங்கும் இதுவரை நடித்த 5 படங்களுக்கு சொந்த குரலில் டப்பிங் பேசியதில்லை. தற்போது பஹத் பாசில் ஜோடியாக ஒரு இந்தியன் பிரணயகதா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த வேடத்துக்குத்தான் முதன்முறையாக டப்பிங் பேசினார்.  இதுபற்றி அமலா கூறும்போது, ஒரு இந்தியன் பிரணயகதா படத்தில் பஹத் பாசில் ஜோடியாக நடிக்கிறேன்.

சத்யன் அந்திக்காடு டைரக்ஷன். சொந்த மொழியில் முதன்முறையாக எனது வேடத்துக்கு டப்பிங் பேசியது ஒப்பிட முடியாதளவுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது என குறிப்பிட்டார். மொழி தெரிந்தும் டப்பிங் பேசுவதை தவிர்க்கும் பல ஹீரோயின்கள் இன்னும் நிறையபேர் இருக்கின்றனர். இதனால் கூடுதல் செலவு ஏற்படுவதாக தயாரிப்பாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்