Your Ad Here

என்னை தாக்கியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்ருதி அறிக்கை


      கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த நடிகை ஸ்ருதிஹாசனை, போரிவிலி திரைப்பட நகர் உதவியாளர் அசோக்சந்தர் திருமுக்கே என்பர் வீடுபுகுந்து தாக்கி உள்ளார். கதவை சாத்திக்கொண்டு ஸ்ருதி தப்பித்திருக்கிறார். இப்போது அசோக்சந்தரை போலீஸ் கைது செய்திருக்கிறது. "நான் ஸ்ருதியை தாக்கவில்லை வேலை கேட்டுத்தான் போனேன்" என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் போலீஸ் நடவடிக்கையில் திருப்தி இல்லாத ஸ்ருதி ஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: என் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவர் வேலை கேட்டு வந்ததாக சொல்வது பொய். அவர் பல இடங்களில் என்னை பார்த்திருக்கிறார். என் படப்பிடிப்பு நடந்த இடத்திலும் அவர் இருந்திருக்கிறார். அப்போது அவர் என்னிடம் வேலை கேட்டிருக்கலாமே. என் உதவியாளர்களிடம் கேட்டிருக்கலாமே என் வீட்டுக்கு வரவேண்டிய அவசியம் என்ன?

அவர் வேலை கேட்டு என்னை அணுகி இருந்தால் முடிந்த உதவிகளை செய்து கொடுத்திருப்பேன். நான் ஒரு பெண். மும்பையில் தனியாக வசிக்கிறேன். என்வீட்டை திறந்து ஒருவர் அத்துமீறி நுழைந்ததை பெரிய குற்றமாக கருதுகிறேன். இந்த பிரச்னையில் மும்பை போலீசார் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்