Your Ad Here

எதிரிகளை அபிமானிகளாக்கிய சமந்தா!


       தற்போது ஆந்திர சினிமாவின் நம்பர் ஒன் குதிரையாக ஓடிக்கொண்டிருக்கிறார் சமந்தா. இந்த நிலையில், அவர் இடத்தை தட்டிப்பறிக்க அனுஷ்கா, தமன்னா போன்ற நடிகைகள் திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இதில் தமன்னா, சமந்தாவுக்கு செல்லயிருந்த ஒரு படவாய்ப்பை லாவகமாக கைப்பற்றி விட்டாராம்.

ஆனபோதும், எந்த டென்சனையும் அவர் மீது காட்டிக்கொள்ளவில்லையாம் சமந்தா. எனக்கு அதிகம் பிடித்த நடிகை அனுஷ்கா என்றால், அதைவிட பிடித்தமான நடிகை தமன்னா. அவரது நடனத்தைப்பார்த்து நானே அசந்துபோயிருக்கிறேன். அப்படியொரு அசத்தலான நடிகை என்று பேட்டி கொடுத்து தமன்னாவுக்கு தன் மீது இருந்த போட்டி மனப்பான்மையை விரட்டியடித்து விட்டார்.

அதேபோல், அனுஷ்கா எனது சீனியர் நடிகை. பிருந்தாவனம் என்ற தெலுங்கு படத்தில் நடித்தபோது எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார். ரொம்ப பெருந்தன்மையான நடிகை என்று மாறி மாறி இரண்டு நடிகைகளைப்பற்றியும் பில்டப் கொடுக்க, சமந்தாவை வீழ்த்தியாக வேண்டும் என்ற வெறியில் களத்தில் நின்று கொண்டிருந்த அனுஷ்கா, தமன்னா இருவருமே இப்போது சமந்தாவின் அபிமானிகளாகிவிட்டனர்.

இதனால் திரைக்குப்பின்னால் நடந்து கொண்டிருந்த தட்டிப்பறிக்கும் களோபரம் இப்போது குறைந்து விட்டதாம். அதனால் எதிரி நடிகைகளின் தொல்லை இல்லாமல் சமந்தாவின் ரூட் ரொம்ப க்ளியராகியிருக்கிறதாம்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்