Your Ad Here

கலகலப்பு இரண்டாம் பாகம் தயாராகிறதாம்!


       சுந்தர்.சி தனது அக்மார்க் காமெடி முத்திரையுடன் இயக்கிய படம் கலகலப்பு. விமல், சிவா, அஞ்சலி, ஓவியா ஆகியோர் நடித்திருந்த அப்படம் சுந்தர்.சிக்கு வெற்றியை கொடுத்ததால் அவரது மார்க்கெட் மறுபடியும் சூடு பிடித்தது. அதோடு, அதில் நடித்திருந்தவர்களுக்கும் புதிய படவாய்ப்புகள் கிடைத்தன.

இந்நிலையில், அதையடுத்து மதகஜராஜா, தீயா வேலை செய்யனும் குமாரு படங்களை இயக்கிய சுந்தர்.சி., இப்போது அரண்மனை என்ற படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார். இதன்பிறகு கலகலப்பு படத்தின் இரண்டாம பாகத்தை இயக்குகிறாராம். அந்த படத்தில் மிர்சி சிவா நடிப்பது உறுதியாகி விட்டதாம். மற்ற நடிகர், நடிகைகளில் யார் யார் நடிக்கிறார்கள் என்கிற விவரங்கள் அரண்மனை முடிந்ததும் வெளியாகுமாம்.

கலகலப்புக்கு பிறகு சிவா நடித்த, தில்லு முல்லு, சொன்னா புரியாது, யா யா, வணக்கம் சென்னை என எந்த படங்களும் வெற்றி பெறாததால், கலகலப்பு-2 படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறாராம். அதோடு, அடுத்த பாகத்தில் இன்னும் வயிறை புண்ணாக்கும் காமெடி கதையை சுந்தர்.சி உருவாக்கயிருப்பதால், காமெடியில் தன்னை இன்னும் மெருகேற்றி நடிக்கவும் தயாராகிக்கொண்டிருக்கிறாராம் மிர்சி சிவா.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்