Your Ad Here

சென்னையில் ஷூட்டிங் நடத்த பிரச்னை : மும்பைக்கு படையெடுக்கும் இயக்குனர்கள்


     சென்னையில் ஷூட்டிங் நடத்துவதில் பிரச்னைகள் ஏற்படுவதால், தமிழ் பட ஷூட்டிங்கை மும்பையில் நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக தமிழ் படங்களின் ஷூட்டிங் மும்பையில் நடத்த தொடங்கி உள்ளனர். அஜீத் நடித்த ஆரம்பம் படம் மும்பையில் படமாக்கப்பட்டது. அதேபோல் விஜய் நடித்த துப்பாக்கி, தலைவா என 2 படங்களின் ஷூட்டிங்கும் மும்பையில் நடந்தது.

தற்போது அவர் நடித்து வரும் ஜில்லா பட ஷூட்டிங் மும்பையில் நடக்கிறது. இதையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கும் மும்பையில் நடக்கிறது. ஜீவா நடிப்பில் உருவாகும் யான் படப்பிடிப்பும் மும்பையில்தான் நடைபெறுகிறது. இது தவிர பல படங்கள¤ன் ஷூட்டிங்கை மும்பையில் நடத்துகின்றனர். இதற்கு காரணம், சென்னையில் முக்கிய சாலைகளிலும் பொது இடங்களிலும் ஷூட்டிங்கிற்கு அனுமதி பெறுவதில் பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது.

சிறு பட்ஜெட் படங்களுக்கு காத்திருந்து சென்னையில் ஷூட்டிங் நடத்த அனுமதி கிடைத்த பின் படமாக்குகிறார்கள். ஆனால் பெரிய ஹீரோக்களுக்கு காத்திருக்கும் பொறுமை கிடையாது. அனுமதி உடனடியாக கிடைக்காவிட்டால் மும்பை அல்லது ஐதராபாத்தில் ஷூட்டிங் நடத்த தயாரிப்பாளருக்கு நெருக்கடி தருகிறார்கள்.

அந்த வகையில் பெரும்பாலான பெரிய படங்களின் ஷூட்டிங் மும்பையில் நடக்கிறது. சமீபத்தில் முதல்வரை சந்த¤த்த பெப்சி மற்றும் இயக்குனர்கள¢ சங்கத்தினர் சென்னையில் ஷூட்டிங் நடத்துவதில் உள்ள சிக்கல்களை தீர்த்து தருமாறு கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்