கரகாட்டக்கதையை படமாக்குகிறாராம் பாலா!
தனக்கும் மற்றஇயக்குனர்களுக்கும் வித்தியாசம் வேண்டும் என்பதற்காக தனது படங்களில் நடிக்கும் நடிகர்களை வருடக்கணக்கில் குளிக்காமல் திரியும் அகோரிகளைப்போன்று மாற்றி நடிக்க வைத்து வருபவர் பாலா. உதாரணத்துக்கு சேது, பிதாமகன், அவன் இவன், பரதேசி போன்ற படங்களை பட்டியலிடலாம். இதில், அவன் இவன் படத்தை கதையே இல்லை என்று சொல்லி எடுத்த பாலா, பரதேசி படத்தை தேயிலைத் தோட்டத்தில் சிக்கிய அடிமைகளின் வாழ்க்கை கதையை சொல்லி கலங்க வைத்திருந்தார்.
அதையடுத்து, விக்ரம், அதர்வா, சசிகுமார் இவர்களில் யாராவது இருவரைக்கொண்டு அடுத்த படத்தை பாலா இயக்க இருக்கிறார் என்று கடந்த சில மாதங்களாகவே செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. ஆனால், இப்போது சசிகுமாரே பாலாவின் அடுத்த பட ஹீரோ என்கிறார்கள்.
எந்த மாதிரியான கதை என்று விசாரித்தபோது, மதுரைப்பகுதியில் வாழும் கரகாட்டக்காரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகிறது என்கிறார்கள். கேலியும் கிண்டலுமாக செல்லும் கரகாட்டக்காரர்களின் கண்ணீரை சொல்லும் வகையில் இந்த கதை உருவாகியிருக்கிறதாம்.
ஏற்கனவே கரகாட்டக்காரன் படத்தில் பசுநேசன் ராமராஜன், தலையில் கிரகமும், காலில் சலங்கையும் கட்டிக்கொண்டு கனகாவுடன் மாங்குயிலே பூங்குயிலே என்று ஆடியது போன்று சசிகுமாரும் கனகச்சிதமாக கரகாட்டம் ஆட தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறாராம். அவருடன் ஜோடி போட்டு ஆடப்போகும் கனகாதான் யார் என்று தெரியவில்லை.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
